- Advertisement -
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே வீரர் ஒருவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
இந்த சம்பவம் முழுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அதில் ஸ்ட்ரைக்கர் அருகே செல்ல முற்படும் அந்த வீரர் மைதானத்திலேயே சரிந்து விழுகிறார். அங்கேயே அவர் உயிரிழந்தார்.
இந்த கிரிக்கெட் வீரரின் பெயர் பாபு நல்வடே. இவருக்கு வயது 47 மாரடைப்பிற்கு பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.