16.1 C
Hatton
Tuesday, April 13, 2021
spot_img
spot_img
spot_img

இதையும் படிங்க

ரயிலில் நசுங்கி உயிரிழக்க வேண்டிய நபர்! நொடிப் பொழுதில் காப்பாற்றிய பொலிஸ்: திக் திக் வீடியோ

இந்தியாவில் ரயிலில் சிக்கி உயிரிழக்க வேண்டிய நபரை, பொலிசார் ஒருவர் தன்னுடைய சமயோசித செயலால் அவரை காப்பாற்றிய வீடியோ காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் சவாய் மாதோபூர் ரயில் நிலையத்தில், முதியவர் ஒருவர் ரயிலில் ஏற முயன்றாரோ அல்லது இறங்க முயன்றாரோ என்பது சரியாக தெரியவில்லை.

ஆனால், ரயில் புறப்படும் போது, திடீரென்று அவர் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அங்கு நடைமேடையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உடனடியாக ஓடி, சாமர்த்தியமாக செயல்பட்டு, அவரை ரயில் மற்றும் நடைமேடைக்கு இடையில் சிக்காமல் வெளியில் இழுத்தார்.

இந்த வீடியோ காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. அதில் இரயிலில் இருந்து தடுமாறிய நபர் சற்று தூரம் இழுத்துச் செல்வது போன்று உள்ளது. உடனே பொலிஸ் அதிகாரி ஓடி வந்து அவரை காப்பாற்றி வெளியில் இழுக்கிறார்.

நடைமேடைக்கும் அடியில் அவர் கால் சிக்கியிருப்பது போன்று தெரிந்தாலும், அதன் பின் அந்த முதியவர் சாதரணமாக எழுந்து நடந்து செல்கிறார். இதைக் கண்ட இணையவாசிகள் சாதுர்யமாக செயல்பட்டு அவரைக் காப்பாற்ற உதவிய பொலிசாரை பாராட்டி வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்