ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்கும்போது, அதனை முறையாக பராமரித்து, பார்த்து பார்த்து வைத்துக் கொள்வோம். இதனால் நமது மொபைலின் ஒளிரும் திரை அனைவரையும் ஈர்க்கிறது.
ஆனால் சிறிது காலம் கழித்து மொபைல் ஸ்கீர்ன் கீறல்கள் விழ தொடங்கும். இதனை சரிசெய்ய சில எளிய வழிகள் உள்ளன. இதுகுறித்து தற்போது பார்க்கலாம். இதன் உதவியுடன் உங்கள் தொலைபேசியின் திரையில் உள்ள கீறல்களை நீக்க முடியும்..
மேஜிக் அழிப்பான் (Magic Eraser) :
திரை கீறல்களை அகற்ற மேஜிக் அழிப்பான் சிறந்த வழியாகும். அழுக்குகளை சுத்தம் செய்ய மேஜிக் அழிப்பான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது மொபைல் திரையில் சிறிய கீறல்களையும் சுத்தம் செய்கிறது. இருப்பினும், அதைப் பயன்படுத்துவதில் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
பற்பசை (Toothpaste) :
பற்களை பிரகாசப்படுத்தும் பற்பசை மூலம் மொபைல் திரையில் கீறல்களையும் அகற்றலாம். முதலில் காட்டனில் சிறிது பற்பசையை எடுத்து முழு திரையிலும் நன்றாகப் பயன்படுத்துங்கள். எனினும் போன் ஸ்பீக்கரை பாதுகாத்து கொள்ளவும்.. சிறிது நேரம் கழித்து, பற்பசையை சுத்தமான காட்டனால் துடைக்கவும். இது சிறிய கீறல்களை நீக்கும். இந்த செயல்முறைக்கு ஜெல் பற்பசையைப் பயன்படுத்த வேண்டாம், வெள்ளை பற்பசையை மட்டுமே பயன்படுத்தலாம்..
கார் மெழுகு (Car Wax) :
காரை பிரகாசமாக்க கார் மெழுகு பயன்படுத்தப்படுகிறது. கார் மெழுகுடன் மெருகூட்டப்படும்போது, அதன் மீது சிறிய கீறல்கள் அகற்றப்படும். மொபைல் திரையில் கீறல்களை நீக்க இந்த மெழுகையும் பயன்படுத்தலாம். திரையில் சிறிது கார் மெழுகை காட்டனில் சேர்த்து பயன்படுத்தியதிய பிறகு சிறிது நேரம் உலர விடவும். உலர்த்திய பின், காட்டனால் சுத்தம் செய்யுங்கள். உங்கள் தொலைபேசி திரையின் உள்ள கீறல்கள் மறைந்துவிடும்.
பேக்கிங் சோடா (Baking Soda):
பேக்கிங் சோடாவை பயன்படுத்தி மொபைல் போனிலிருந்து கீறல்களை நீக்கலாம். இதற்காக, பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்யுங்கள். இப்போது பேஸ்ட்டை காட்டனில்ல் எடுத்து மொபைல் திரையில் தடவவும். பேஸ்ட்டை தடவி சிறிது நேரம் விட்டு விடுங்கள். காய்ந்ததும் காட்டன் அல்லது மென்மையான துணியால் துடைக்கவும். உங்கள் மொபைல் திரையில் உள்ள சிறிய கீறல்கள் அகற்றப்படும்.
பென்சில் அழிப்பான் (Pencil eraser) :
தொலைபேசி கீறல்களை பென்சில் அழிப்பான் மூலம் அழிக்க முடியும். கீறல்களை நீக்க, மெதுவாகவும் லேசாகவும் உள்ள பென்சில் அழிப்பான் மூலம் திரையில் தேய்க்கவும். இதனால் சிறிய கீறல்கள் திரையில் இருந்து மறைந்துவிடும். அழிப்பான் நல்ல தரம் மற்றும் மென்மையாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.