பானகம் என்பது வெறும் ஆற்றல் தரும் பானமாக மட்டுமல்லாமல், ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பங்கு அளப்பரியது என்கிறார்கள் மருத்துவர்கள்.
குறிப்பாக, இது ஆயுர்வேதத்தில் குளுக்கோஸுக்கு நிகரான ஒன்று என்பதோடு, ஏராளமான ஆரோக்கியப் பலன்களையும் தரக்கூடியது. இந்த அறுசுவை பானகத்தை ரிலாக்ஸ் டைமில் அருந்துங்கள்; உடலை வளமாக்குங்கள்.
அறுசுவை பானகம் எப்படிச் செய்வது?
ஒரு நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து 200 மில்லி நீரில் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும் அல்லது ஒரு பெரிய எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து 200 மில்லி தண்ணீர் அளவு கலந்துகொள்ளவும்.
கரைத்த புளி அல்லது எலுமிச்சைச்கரைசலை ஒரு டேபிள்ஸ்பூன் பொடித்த வெல்லம், ஒரு சிட்டிகை உப்பு, நசுக்கிய பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் ஒன்று மற்றும் ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ சேர்த்து நன்றாகக் கலக்கினால் அனைத்து சுவைகளும் அடங்கிய பானகம் தயார்.
அறுசுவை பானகத்தின் சிறப்பு
இதை வாரம் ஒருமுறை பருகி வர, நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். பூச்சி மற்றும் விஷக்கடியில் இருந்து நம்மைப் பாதுகாக்க உதவும். சருமம் மிளிரும். சரும நோய் வராமல் பாதுகாக்கும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.