thakkali chutney recipe: தக்காளி சட்னி நாம் அடிக்கடி செய்யும் முக்கிய உணவுப் பொருளாகும். இப்போது இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது ரோட்டு கடை தக்காளி சட்னி.
இதனை நிச்சயமாக உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். கண்டிப்பாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அத்தனை சுவை உள்ளதாக இருக்கும்.இப்போது தக்காளி சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தக்காளி – 4 (நறுக்கிக்கொள்ளவும்)
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு அதில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து வறுத்துக்கொள்ளவும். தக்காளி, உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும். கடைசியாகக் கொத்தமல்லி சேர்த்துக் கலந்து ஆறவிடவும். ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். தாளிப்பதற்குக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்துச் சேர்க்கவும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.