Fri, May7, 2021

லாலிபாப் சிக்கன்..! எப்படி செய்வது தெரியுமா?

லாலிபாப்பை விரும்பாத குழந்தைகள் அரிது. இன்றைய நாட்களில் வீட்டிலேயே ஆன்லைனில் பாடங்களைப் படிக்கும் குழந்தைகளுக்கு சத்தான, சுவையான உணவை அளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

அதற்கு அவர்களுக்கு விருப்பமான வடிவில் சிக்கனை வைத்து சூப்பரான இந்த சிக்கன் லாலிபாப் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். புத்துணர்ச்சி பெறுவார்கள்.

லாலிபாப் சிக்கன் செய்ய என்ன தேவை?

லாலிபாப் சிக்கன் – 6 பீஸ் (லாலிபாப் பீஸ் தேவை என்று கடையிலேயே வெட்டி வாங்கிக்கொள்ளலாம்)

சோயா சாஸ் – அரை டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்

எலுமிச்சைச்சாறு – ஒன்றரை டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

கரைத்துக்கொள்ள..

மைதா, கார்ன்ப்ளார் – தலா அரை டேபிள்ஸ்பூன்

முட்டை – ஒன்று (உடைத்துக்கொள்ளவும்)

காஷ்மீர் மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்

உப்பு, தண்ணீர் – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

லாலிபாப் சிக்கன் எப்படிச் செய்வது?

லாலிபாப் சிக்கனைத் தண்ணீரில் அலசி எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் லாலிபாப் சிக்கன், சோயா சாஸ், மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து, சிக்கன் பீஸில் மசாலா பிடிக்குமாறு கலந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

கரைக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ளவும். பொரிக்கத் தேவையான எண்ணெயைச் காயவைத்து, புரட்டி வைத்த லாலிபாப்பை ஒவ்வொன்றாக கரைத்த மாவில் நனைத்து, தீயைக் குறைத்து வைத்து, பொன்னிறமாக வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்.

லாலிபாப் சிக்கன் குறிப்பு

காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்ப்பதால் பார்க்க நல்ல கலராக இருக்கும். ஒவ்வொன்றாக நிதானமாகப் பொரித்தெடுப்பது கூடுதல் சிறப்பு.

செட்டிநாடு சிக்கன் சூப்!

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்