Fri, May7, 2021

விஜயதசமி ஸ்பெஷல் அக்கார அடிசல்

நவராத்திரி வழிபாட்டின் இறுதி நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. துர்கை ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்டு 10ஆம் நாளில் அவனை வெற்றிகொண்டாள். அந்த வெற்றியைக் குறிக்கும் தினமே விஜயதசமி. இந்த நன்னாளை மேலும் சிறப்பாக்க அக்கார அடிசல் செய்து கொண்டாடுவோம்.

என்ன தேவை?

பச்சரிசி – அரை கப்

பாசிப்பருப்பு – ஒரு டீஸ்பூன்

பால் – ஒரு லிட்டர்

வெல்லம் – ஒரு கப்

தண்ணீர் – கால் கப்

ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

பச்சைக் கற்பூரம் – ஒரு சிட்டிகை

முந்திரி – 10

குங்குமப்பூ – சிறிதளவு

நெய் – 4 டீஸ்பூன்

ஜாதிக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்துப் பொடித்த வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லத்தைக் கரையவிடவும். பிறகு வடிகட்டிக்கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி உருகியதும் முந்திரியைச் சேர்த்து வறுத்தெடுத்து தனியாக வைக்கவும்.

அதே குக்கரில் பச்சரிசி, பாசிப்பருப்பை ஒன்றாகச் சேர்த்து பச்சை வாசனைப் போகும் வரை வறுக்கவும். இத்துடன் அரை லிட்டர் பால் சேர்த்துக் கலக்கி மூடவும். ஐந்து விசில் வரும் வரை வேகவிடவும்.

வெந்த கலவையை அடிகனமான வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றவும். இத்துடன் மீதம் இருக்கும் அரை லிட்டர் பால், காய்ச்சிய வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஜாதிக்காய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். பால் வற்றி அக்கார அடிசல் சுருண்டு வரும்போது முந்திரியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்