கேரள மாநிலம் எர்ணாகுளம் பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை வைற்றிலா அருகே கார் ஒன்று பைக் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து உருண்டது .
இதில் காரில் இருந்த 2019ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்ற , ஆன்சி கபீர்,( 25 வயது), அழகி போட்டியில் இரண்டாவது ரன்னர்-அப் பட்டம் வென்ற அஞ்சனா ஷாஜன் ( 26) ஆகியோர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆன்சி கபீர் திருவனந்தபுரம் மாவட்டம், ஆட்டிங்கள் அருகே உள்ள ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்தவர். அஞ்சனா ஷாஜன் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவராவார்.
அஞ்சனா ஒரு ஆயுர்வேத மருத்துவர். அவருக்கு மாடலிங்கில் முன் அனுபவம் இல்லை மிஸ் கேரளா முதல் ரன்னர்-அப் பட்டத்தை வென்றார்.
அவர்களுடன் காரில் பயணம் செய்த , அவர்களது நண்பர்களான , முகமது ஆசிக் (30), அப்துல் ரஹ்மான் (28 வயது) ஆகிய இருவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக எர்ணாகுளம் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த வைற்றிலா காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.
Leave a Reply
View Comments