இன்று (24) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒக்டென் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாவாகவும், ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 400 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருளின் விலைகளை அதிகரிப்பதற்கு அமைச்சரவை வழங்கியதையடுத்தே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கேற்ப போக்குவரத்து மற்றும் இதர சேவைக் கட்டணங்களை திருத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.
Leave a Reply
View Comments