2019 ஆம் ஆண்டு தேவராட்டம் படத்தில் இணைந்து பணியாற்றிய கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கெளதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மஞ்சிமா மோகனின் பிறந்தநாளில், தனது வாழ்த்துகள் மூலம் அவருடனான காதலை மறைமுகமாக உறுதிப்படுத்தினார் கெளதம் கார்த்திக்.
இருவரும் இன்னும் தங்கள் காதலை வெளிப்படையாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், கெளதம் கார்த்திக்கிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கெளதம் கார்த்திக் தற்போது சிம்புவின் பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்ஸ்டகிராம் உரையாடலின் போது, திருமணம் குறித்த கேள்விக்கு, ’விரைவில் என நம்புகிறேன்’ என்று பதிலளித்துள்ளார் கெளதம் கார்த்திக்.
2019 ஆம் ஆண்டு தேவராட்டம் படத்தில் இணைந்து பணியாற்றிய கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவரும் தங்கள் காதலைப் பற்றி இரு குடும்பத்தினரிடமும் தெரிவித்து விட்டார்களாம்.
காதலுக்கு ஓகே சொன்ன பெற்றோர் தற்போது திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார்களாம்.