நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் தமிழ் ஷோ ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.
வெளிநாடுகளில் சர்வைவர் ஷோக்கள் பல பெயர்களில் அரங்கேறி வருகின்றன. நிர்வாணமாக ஆணும் பெண்ணும் ஒரு காட்டுக்குள் வசிக்கும் ஷோக்களும் உருவாக்கப்பட்டு டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைத்து வருகின்றன.
இந்நிலையில், தமிழ் ரசிகர்களுக்காக வெளியான முதல் சர்வைவர் தமிழ் ஷோ ரசிகர்களின் கவனத்தை முதல் சீசனிலேயே வெகுவாக கவர்ந்துள்ளது.
தடவி கொடுப்பது என்கிற சீனே கிடையாது என்கிற ரேஞ்சுக்கு நடிகர் அர்ஜுன் சர்வைவர் தமிழ் ஷோவை செம பயங்கரமாக ஹோஸ்ட் செய்து வருகிறார். தப்பு பண்ணா அது யாரா இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் ரோஸ்ட் செய்து விடுகிறார் அர்ஜுன்.
அவரது ஹோஸ்டிங்கிற்காகவே பல ரசிகர்கள் சர்வைவர் தமிழ் ஷோவை பார்த்து வருகின்றனர். காடர்கள் அணியின் கேப்டனாக இருந்த காயத்ரி ரெட்டியையே அந்த அணியினர் ஆரம்பத்திலேயே வெளியே அனுப்ப மூன்றாம் உலகத்தில் பல வாரங்களாக தொடர்ந்து போராடி எப்படியாவது மறுபடியும் காடர்களை போய் சந்திக்க வேண்டும் என காத்திருந்த அவர் கடைசியாக அம்ஜத் கானுடன் நடந்த போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறினார்.
சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய காயத்ரி ரெட்டி தனது லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் சர்வைவர் ஷோவில் இருந்த புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். Before and After என அவர் போட்டுள்ள கேப்ஷனை பல ரசிகர்களும் பாராட்டி காயத்ரி ரெட்டி தான் ரியல் சர்வைவர் என புகழ்ந்து வருகின்றனர்.
இந்த புகைப்படத்தை பார்த்தால் மேக்கப் போடுவதற்கு முன் மேக்கப் போட்ட பின் மாதிரி தான் இருக்கு காயத்ரி.. என சில நெட்டிசன்கள் காயத்ரி ரெட்டியின் Before and After சர்வைவர் தமிழ் ஷோ என அவர் ஷேர் செய்த புகைப்படத்தை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
தளபதி விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீரங்கனையாக நடித்த காயத்ரி ரெட்டி நடிகர் கவின் மற்றும் அம்ரிதா அய்யர் நடிப்பில் சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான லிப்ட் திரைப்படத்தில் காயத்ரி ரெட்டி தான் பேயாக நடித்திருப்பார்.
ரியாலிட்டி ஷோக்களான சர்வைவர் தமிழ் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் என்ன ஒரே ரெட்டி பெயரா இருக்கே என்றும் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.