ஓரினச்சேர்க்கை
கடந்த ஒரு ஆண்டு காலமாக ரஷியா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பயணம் செய்த ஒரு நாள் கழித்து, ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகள் மீது தொடர்ச்சியாக சில குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளார்.
தனது குற்றச்சாட்டில் மேற்கு நாடுகள் போரைக் கட்டவிழ்த்துவிடுவதாகவும் கத்தோலிக்க மற்றும் குடும்ப விழுமியங்களை சீர் குலைப்பதாகவும் அவர் சாடினார்.
செவ்வாயன்று ரஷ்ய ஃபெடரல் அசெம்பிளியின் முன் நாட்டுக்காக நிகழ்த்திய மாநில உரையில், புடின் கூறுகையில், “இங்கிலாந்தின் சர்ச்சுகள் அண்மையில் பாலின நடுநிலைமையான கடவுளை உருவாக்குவது குறித்து விவாதித்து வருகிறார்கள்.
அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே புரியவில்லை. மற்றொரு பக்கம் தன்பாலீர்ப்பு திருமணங்களை ஆதரித்து சட்டம் இயற்றி வருகிறார்கள். இது குடும்ப அமைப்புகளை சீர்குலைக்கும் முயற்சி” என்று புடின் கூறினார்.
“அவர்கள் குடும்பம் என்ற நிறுவனத்தை அழித்து வருகின்றனர். அவர்களின் கலாச்சார-வரலாற்று அடையாளம் தொடர்பான பல்வேறு வக்கிரங்களை இது வெளிப்படுத்துகிறது.
மற்றொரு பக்கம் இதனால் பாதிரியார்கள் ஓரினச்சேர்க்கை திருமணங்களை அங்கீகரித்து நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குடும்பம் என்பது பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையேயான ஒன்றியம் ஆகும்” என்று புடின் கூறினார்.