6 வருடங்களாக காதலித்துக் கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரின் திருமணம் ஜூன் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரெசார்ட் ஒன்றில் கோலாகலமாக நடைபெற்றது.
அதிகாலை சுபமுகூர்த்த நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக்கொடுத்து லேடி சூப்பர்ஸ்டார் கழுத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தாலி கட்டுன அழகான தருணம் நிறைந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தற்போது வரை வைரலாகி கொண்டிருக்கிறது.
இவர்களது திருமணத்திற்கு ஷாருக்கான், சூர்யா, அஜித், கார்த்தி, இயக்குனர் மணிரத்தினம், கேஎஸ் ரவிகுமார், சிவா என திரைப் பிரபலங்கள் பலரும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.
இந்நிலையில் இவர்களது திருமணத்திற்கு வருகை தந்தவர்களுக்கு தங்கம் வெள்ளி என விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள் நயன்-விக்கி சார்பில் வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த தாம்பூலப் பையில் தங்களுக்கு திருமணத்திற்கு வந்ததற்கு நன்றி என்றும் குறிப்பிட்டிருக்கிறது இந்த புகைப்படமும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. தங்கம் வெள்ளி என விலை உயர்ந்த பொருட்களை பரிசளித்து ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது குறித்து ரசிகர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.