இந்திய மாநிலம் கோவாவில் மபுசா பகுதியில் பிரபலமான எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இருதினங்களுக்கு முன் பெண் ஒருவர் தனது இடுப்பில் வலி ஏற்பட்டதன் காரணமாக அந்த மருத்துவரின் கிளினிக்குக்கு பரிசோதனை செய்வதற்காக தனியாகச் சென்றுள்ளார்.
அப்போது அந்த கிளினிக்கில் பெண் உதவியாளர் இல்லாத நிலையில், மருத்துவரே பரிசோதனைக்காக வந்த பெண்ணை உள்ளே அழைத்துச் சென்றிருக்கிறார்.
பின்னர் சோதனை செய்யவேண்டும் எனக் கூறி படுக்கச் சொல்லியிருக்கிறார். பின்னர், அந்த பெண் அணிந்திருந்த பேண்ட்டை அந்த மருத்துவரே கழற்றியிருக்கிறார்.
மருத்துவர் தனக்கு பரிசோதனை செய்வதற்காகத்தான் இப்படிச் செய்கிறார் என அந்தப் பெண் நினைத்திருந்த நேரத்தில், மருத்துவர் தனது கையை பெண்ணின் பிறப்புறுப்பை நோக்கி நகர்த்தியுள்ளார்.
இதனால் அதிர்ந்த அப்பெண் மருத்துவரின் கையை சட்டென தட்டிவிட்டி, சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி தனது காருக்கு சென்றார்.
பின்னர் தனது கணவருக்கு போன் செய்து தனக்கு நடந்தவற்றை கண்ணீருடன் கூறியுள்ளார். அவரது கணவர் விரைந்து வந்து மருத்துவரை கன்னத்தில் ஒரு காட்டு காட்டியுள்ளார்.
பின்னர், காவல்நிலையம் சென்று சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
குறித்த மருத்துவர் அப்பகுதியில் மிகவும் பிரபலமான மருத்துவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சைக்காக தனியாக வந்த பெண்ணிடம் அவர் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.
Leave a Reply
View Comments