Homeசெய்திகள்தன்னை தானே திருமணம் செய்துகொள்ளும் பெண்; ஹனிமூன் எங்கு தெரியுமா?

தன்னை தானே திருமணம் செய்துகொள்ளும் பெண்; ஹனிமூன் எங்கு தெரியுமா?

தன்னைதானே இளம்பெண் ஒருவர் திருமணம் செய்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குஜராத் மாநிலம் பரோடா பகுதியை சேர்ந்தவர் ஷாமா பிந்து(24). இவர் எம்,எஸ் பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பட்டம் பெற்றுள்ளார்.

- Advertisement -

இதையடுத்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஷாமாவும் மற்ற இந்திய பெண்களைப்போலவே ஜூன் 11ம் தேதி நடைபெறவுள்ள தன்னுடைய திருமணத்திற்கே தயாராகி உள்ளார்.

இவரின் திருமணத்திற்காக பிரேத்யேக ஆடை மற்றும் அனைத்து சம்பிராதாயங்களும் திருமணத்தில் நடைப்பெற உள்ளது. இதற்காக சில உறவினர்களையும் அழைத்துள்ளார்.

- Advertisement -

மணமகனை தவிர அனைத்து நிகழ்ச்சிகளும் நடைப்பெறுகிறது. இந்தியாவில் பெண் தன்னை தானே திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு முதல் முறையாக குஜராத்தில் நடைப்பெறவுள்ளது.

இதுகுறித்து ஷாமா பிந்து தெரிவிக்கையில், சிறு வயதில் இருந்தே திருமணம் செய்துக்கொள்ள ஆசை இல்லை. திருமண பாரம்பரியம் என்னை பெரியதாக ஈர்க்கவில்லை. நான் ஒரு மணமகளாக வேண்டும் என விரும்பினேன்.

அதனால் என்னை நானே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன். இது சோலோகேமி என அழைக்கப்படுகிறது. மேலும், இது போன்று இந்திய பெண்கள் யாராவது திருமணம் செய்துகொண்டார்களா என தேடிப்பார்த்தேன். ஆனால் யாரும் அப்படி செய்துகொள்ளவில்லை.

இதனால் திருமணத்தை புனிதமாக கருதும் இந்திய நாட்டில் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் முதல் பெண் நானாக இருப்பேன். என்னுடைய பெற்றோர்களும் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

அவர்களுக்கு இதில் மகிழ்ச்சி தான். எனது மெஹந்தி ஜூன் 9ம் தேதியும், திருமணம் ஜூன் 11ம் தேதியும் மாலை 5 மணிக்கு நடைப்பெற உள்ளது என தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்து ஹனிமூனுக்கு இவர் கோவா செல்ல உள்ளாராம்.

 

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular