Save 20% off! Join our newsletter and get 20% off right away!

குரு பெயர்ச்சி… கூரையை பிய்த்து பண மழை பொழியவுள்ள ராசிகள்

குரு பெயர்ச்சி :

குரு பெயர்ச்சி : ஜோதிடத்தின் படி, ஜூலை 29 ஆம் தேதி, குரு பகவான் அல்லது வியாழன் கிரகம் அதன் சொந்த ராசியான மீனத்தில் வக்ர நிலையில் பெயர்ச்சியாகிறது.

ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தனது நிலையை மாற்றிக் கொள்கிறது. இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். இது சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் இருக்கும்.

குருவின் வக்ர பெயர்ச்சி:

ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தனது நிலையை மாற்றிக் கொள்கிறது என்றும், அதன் தாக்கம் 12 ராசிக்காரர்கள் மீதும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஜூலை 29 ஆம் தேதி, குரு பகவான் அல்லது வியாழன் கிரகம் அதன் சொந்த ராசியான மீனத்தில் வக்ர நிலையில் பெயர்ச்சியாகிறது. வியாழன் கிரகம் அறிவுத்திறன், வளர்ச்சி, செல்வம், மற்றும் நல்லொழுக்கம் போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

எனவே, வியாழனின் இந்த ராசி மாற்றம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பாக யோகம் தர உள்ளது.

குரு பெயர்ச்சி – ரிஷபம்:

ஜோதிட சாஸ்திரப்படி வியாழன் ரிஷபம் ராசிக்கு 11-ம் வீட்டில் வக்ர நிலையில் நுழைகிறார். இது வருமானம் மற்றும் செல்வம் நிறைந்த இடமாக கருதப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் உங்களுக்கு வருமானம் உயர வாய்ப்பு உள்ளது. திடீர் பண வரவு உண்டாகும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். எந்தவொரு வணிக ஒப்பந்தத்தையும் முடிக்க முடியும். உங்களுக்கு தொழிலில் லாபம் உயரும். நீங்கள் புதிய தொழில் தொடங்க நினைத்தால், இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

குரு பெயர்ச்சி – சிம்மம்:

வியாழன்சிம்மம் ராசிக்கு 12ம் வீட்டில் நுழைகிறார். இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு இருக்கும். தடைபட்ட வேலை நடந்து முடியும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண யோகம் கைகூடும். வருமானம் அதிகரிக்கும். நிதி நிலை வலுவடையும். சிம்ம ராசிக்காரர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

குரு பெயர்ச்சி – மிதுனம்:

வியாழன் மிதுன ராசிக்கு 10 வீட்டில் வக்ர நிலையில் பெயர்ச்சியாகிறது. ஜோதிட சாஸ்திரப்படி மிதுனம் ராசியை புதன் ஆட்சி செய்கிறது.எனவே, இந்த நேரம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை, வணிகம் மற்றும் வேலைத் துறை நிறைந்த இடமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வரலாம். வேலையில் பதவி உயர்வு உண்டாகும். அதேபோன்று, புதன் மற்றும் வியாழன் இடையே நட்பு உணர்வு மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

குரு பெயர்ச்சி – கடகம்:

இந்த ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் வியாழன் வக்ர நிலையில் பெயர்ச்சியாகிறது. இது அதிர்ஷ்டம் மற்றும் ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாக கருதப்படுகிறது. வியாழன் பிற்போக்கு காலத்தில், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். இந்த நேரத்தில், நீண்ட நாள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். நீங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செய்யலாம்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.