Save 20% off! Join our newsletter and get 20% off right away!

விமான நிலைய திரையில் சில நிமிடங்கள் தோன்றிய ஆபாச படம்!

விமான நிலைய திரையில் சில நிமிடங்கள் தோன்றிய ஆபாச படம்!
Rio de Janeiro, Brazil - December 1, 2014: People doing the checkin at the Santos Dumont Airport located in Rio de Janeiro, Brazil

பிரேசில் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான ரியோ டி ஜெனிரோவில் உள்ள சான்டோஸ் டுமாண்ட் விமான நிலையத்தில் பயணிகள் விளம்பரங்கள் மற்றும் விமானம் தொடர்பான தகவல்களை பார்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த திரையில் திடீரென ஆபாச படக்காட்சிகள் தோன்றியுள்ளது.

இதையடுத்து ஹேக் செய்யப்பட்டதன் காரணமாக இவ்வாறு நிகழ்ந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பற்றி பிரேசிலின் விமான போக்குவரத்து ஆணையம் இன்ஃப்ராரோ சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “விமான நிலையத்தில் அமைந்திருந்த மீடியா ஸ்கிரீன்களில் தோன்றிய காட்சிகளுக்கு அதில் விளம்பரம் செய்ய உரிமை பெற்றுள்ள நிறுவனமே பொறுப்பு.

அவர்கள் தங்களுக்கென உருவாக்கப்பட்ட சிஸ்டம்களின் உதவியோடு டிஸ்ப்ளேயில் தெரியும் காட்சிகளை வெளியட முடியும். எனவே இதற்கும் இன்ஃப்ராரோ நிறுவனத்துக்கு எந்த தொடர்பும் இல்லை.

ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகிக்கபடும் ஸ்கிரீன்கள் அனைத்தும் ஆஃப் செய்யப்பட்டன.” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கடையே திடீரென தோன்றிய ஆபாச விடியோ சிலருக்கு சிரிப்பை வரவழைத்தாலும், குழந்தைகளுடன் இருந்த பலருக்கும் அசெளகரியமான உணர்வை தந்துள்ளது.

ரியோ டி ஜெனிரோ நகரில் அமைந்துள்ள இரண்டாவது விமான நிலையமாக சான்டாஸ் டுமாணட் உள்ளது. இந்த விமான நிலையத்துக்கு பிரேசில் நாட்டின் விமான முன்னோடியான ஆல்பர்ட் சான்டோஸ் டுமாண்ட் நினைவாக அந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் ராணுவனத்தினர் என இருவரும் பயன்படுத்தப்படும் விமான நிலையமாக இது இருந்து வருகிறு.

முன்னதாக, இதுபோன்றதொரு சம்பவம் கடந்த 2017ஆம் ஆண்டில், டெல்லியில் அமைந்துள்ள ராஜிவ் செளக் என்ற பிஸியான மெட்ரோ ஸ்டேஷனல் நிகழ்ந்துள்ளது.

அந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எல்ஈடி ஸ்கீரீன்களல் 10 நிமிடம் வரை ஆபாச விடியோ ஒளிபரப்பாகியுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிர்வாகம் விசாரணையும் மேற்கொண்டது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.