பெண்கள் தங்கள் மாதவிடாய் பற்றி பிறரிடம் பேசுவதை சங்கடமானதாக நினைக்கின்றனர். மேலும் சிலர் மாதவிடாய் தூய்மையற்றது என்றும் கூறுகின்றனர். மாதவிடாய் சுகாதாரத்தைப் பற்றி பெண்கள் வெளிப்படையாகப் பேசுவது என்பது இந்த சமூகத்தில் இல்லை என்றே சொல்லலாம்.
நீங்கள் மாதவிடாய் நாட்களில் தனிப்பட்ட சுகாதாரத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். இல்லையானால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இந்த நாட்களில் நீங்கள் சோர்வடையும் வாய்ப்புள்ளது. ஒரு பெண்ணின் ஆரோக்கியத்திற்கும் உடலமைப்பிற்கும் மாதவிடாய் சுகாதாரம் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வாழும் அனைத்து பெண்களிடம் பேச வேண்டிய ஒரு விஷயமாக இந்த மாதவிடாய் சுகாதாரம் அமைகிறது.
மாதவிடாய் சுகாதாரத்தை பராமரிப்பது அவசியமானது. பொதுவாக மாதவிடாய் நாட்களில் உடலின் கருப்பை வாயில் இருந்து வெண்ணிறத்தில், இரத்தத்தையும்(whiteness with blood) வெளியேறும். இதன் மூலம் மாதவிடாய் தொற்று அபாயம் அதிகரிக்கிறது. மாதவிடாயின் போது கருப்பை வாய் திறப்பு மூலமாக பாக்டீரியாக்கள் கருப்பை மற்றும் இடுப்பு குழிக்குள் நுழைந்து, பல்வேறு தொற்றுகளை ஏற்படுத்துகிறது.
மாதவிடாய் சுகாதாரம் என்பது பொது நலத்துடன் தொடர்புடையது. போதுமான சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் போனால் மாதவிடாய் நாட்களில் மன அழுத்தம் அதிகரிப்பதோடு பல நோய்த்தொற்றுகளின் அபாயம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
மோசமான சூழ்நிலைகள் மற்றும் மோசமான மாதவிடாய் சுகாதாரம் இவற்றால் இனப்பெருக்கம் மற்றும் சிறுநீர் பாதைகளில் நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் அதிகம்.
மாதவிடாய் சுகாதார குறிப்புகள்
உங்கள் நாப்கினை அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்க்கவும். நீங்கள் சானிட்டரி நாப்கினை பயன்படுத்தினாலும் சரி அல்லது துணியைப் பயன்படுத்தினாலும் சரி சில மணிநேரங்களுக்கு ஒருமுறை உங்கள் நாப்கினை மாற்றுவது நல்லது. ஒரே நாப்கினை பல மணிநேரம் பயன்படுத்தினால் அரிப்பு, எரிச்சல் மற்றும் தோல் தொற்றுகள் ஏற்படலாம். உங்கள் நாப்கினை அடிக்கடி மாற்றினால், உங்கள் பிறப்புறுப்பு பகுதி வறண்டு காணப்படுவதோடு ,தொற்றுநோய்களுக்கான அபாயமும் குறையும்.
காட்டன் துணிகளுக்கும் இவை பொருந்தும். நீங்கள் உபயோகிக்கும் காட்டன் துணிகளை தூய்மையானவையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்தும் காட்டன் துணி முற்றிலும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது அவசியம். அதை ஒருமுறை மட்டுமே பயன்படுத்துங்கள். இந்த காட்டன் துணிகள் மக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்.
மேலும் அவை மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக இருந்தால், ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் முன் அதை கிருமி நீக்கம் செய்யவது அவசியம்., அவை பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் உள்ளன என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். நாம் நாப்கின் அல்லது காட்டன் துணிகளை பயன்படுத்தும் முன்னும், பயன்படுத்திய பின்னும், உங்கள் கைகளை நன்கு கழுவ வேண்டும்.
அதிக அளவு சோப்பை உங்கள் பீறப்புறுப்புகளில் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. யோனியை சுயமாக சுத்தம் செய்யவது, மேலும் சுத்தம் செய்வதற்கு ஒரு சிறிய அளவு சாதாரண சோப்பை பயன்படுத்துவது, இந்த பகுதியில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவதை தடுக்க உதவும்.
உங்கள் சானிட்டரி நாப்கினை சரியான முறையில் அகற்றுவது மிக முக்கியம். அவற்றைத் தூக்கி எறிவதற்கு முன், உங்கள் சானிட்டரி நாப்கின் அல்லது காட்ட்டன் துணிகளை ஒரு கவரிலோ அல்லது பேப்பரிலோ சுற்றிய பின்பே அதை குப்பையில் போட வேண்டும் . இது எதிர்காலத்தில் நோய்கள் மற்றும் பாக்டீரியாக்கள் அங்கு வளர்வதை தடுக்க உதவும். நாப்கினை அகற்றிய பிறகு, உங்கள் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது குளிக்கவேண்டும். இது நாம் சுத்தமாக இருப்பதற்க்கும், புத்துணர்ச்சியுடன் இருப்பதற்க்கும், நம் மீது துர்நாற்றம் ஏற்படுவதை போக்குவதற்கும், தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாப்பதற்கும் உதவுகிறது.
மாதவிடாய் ஏற்படும் ஒவ்வொருபெண்களுக்கும் மாதவிடாய் சுகாதாரம் என்பது அவசியமானதாகும். மாதவிடாய் சுகாதாரம் இன்னும் பொது மக்களிடையே மோசமான பெயரைக் கொண்டிருந்தாலும், பருவமடையும் சிறுமிகளுக்கு இது குறித்து நாம் தெரிவிக்க வேண்டியது அவசியம். மாதவிடாய் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை சமூகத்திலுள்ள மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
Periods, Vaginal Hygiene