நமது உடலில் சாதாரண நேரத்தில் இருக்கும் வெப்பத்தை விட கோடை காலத்தில் உடலின் வெப்பமானது அதிகமாகவே இருக்கும். இது உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.
அனைத்து தரப்பினரும் வெயிலை சமாளிக்க முடியாமல் தவியாய், தவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இந்த சமயங்களில் நாம் எந்த உணவாக இருந்தாலும் பார்த்து தான் சாப்பிட வேண்டும். அந்தவகையில் ஆகவே இந்த அனல் பறக்கும் வெயிலை சமாளிப்பது குறித்து என்ன மாதிரியான முன் எச்சரிக்கையை எடுக்கலாம் என்பதை பார்ப்போம்.
கோடைகாலத்தில் மிருதுவான வெள்ளாடை, வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணிவதால் வெப்பத்தின் தாக்கம் குறையும்.
கருப்பு, கனமான மற்றும் இறுக்கமான ஆடைகளை அணிவதையும் கடினமான வேலையையும் தவிர்த்தல் வேண்டும்.
வெயில் நேரங்களில் வெளியே செல்லும்போது கண்களை பாதுகாக்க கண்ணாடி, உடலைப் பாதுகாக்க குடை, தொப்பி, காலணி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
பயணத்தின்போது குடிநீரை எடுத்து செல்வது மிக நல்லது.
காலை, மாலை நேரத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.
நீர்ச்சத்து குறையாமல் இருக்கும் வகையில், பழச்சாறு, மோர், இளநீர் மற்றும் தர்பூசணி, நுங்கு போன்றவைகளை பயன்படுத்தலாம்.
உடலில் சோர்வு, தளர்ச்சி, தலைவலி போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
அதிகம் புரத சத்து உள்ள உணவுகள், காரமான உணவுகள் பதப்படுத்தப்படாத பழைய உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும்.
இரவு நேரங்களில் வெளிக்காற்று வீட்டிற்குள் புகும் வகையில், வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைக்கலாம்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.