நம்மில் பெரும்பாலானோருக்கு விந்துக்கும், விந்தணுக்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரிவதில்லை. இதுகுறித்த தவகவல்களை தெரிந்து கொள்வதற்கு மக்களும் அவ்வளவாக அக்கறைகே காட்டுவதில்லை.
விந்து என்பது விந்தணுக்களில் காணப்படும் திரவமாகும், இது ஒட்டும் தன்மையுடையது. இது விந்தணு உயிரணுக்களுடன் மற்ற வகை ஆண் உடல் திரவங்களையும் கொண்டுள்ளது. ஒரு மனிதனின் இனப்பெருக்கத்தின் தரம் முற்றிலும் அவரது விந்தணுக்களின் தரத்தைப் பொறுத்தது.
ஆண்கள் விந்தணுக்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டிய காரணம் என்னவென்றால், அவர்களின் வாழ்க்கை முறை விந்தணுக்களின் தரம் மற்றும் இயக்கம் ஆகியவற்றையும் பாதிக்கிறது என்ற உண்மையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். விந்தணுக்கள் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
சில பெண்கள் விந்தணுக்களுக்கு ஒவ்வாமை உடையவர்கள். உண்மைதான், அவர்கள் விந்தணுக்களுக்கு ஒவ்வாமை ஏற்படும்போது அரிப்பு உணர்வு, வீக்கம், எரியும் உணர்வு அல்லது சிவத்தல் ஆகியவற்றை அனுபவிக்க முனைகிறார்கள். இதனால் அவர்களுக்கு உடலுறவு மீதான ஆர்வம் குறைந்துவிடும்.
பெரும்பாலான ஆண்கள் தாங்கள் சாப்பிடும் உணவுகள் விந்துவின் சுவையை பாதிக்கிறது என்ற உண்மை தெரியாமல் உள்ளனர். ஆமாம், நீங்கள் புகைபிடித்தல் மற்றும் காபிக்கு அடிமையாக இருக்கும்போது விந்தணுவின் சுவையை மாற்றுகிறது.
மேலும் உங்கள் உணவில் ஆரோக்கியமான மற்றும் இயற்கையான பழங்கள் மற்றும் காய்கறிகளால் நிரப்பப்படும்போது இனிமையான சுவை கிடைக்கும். எனவே ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.
போஸ்ட் ஆர்காஸ்மிக் நோய் என்று அழைக்கப்படும் ஒரு கோளாறு உள்ளது, அதற்கு கண்டிப்பாக சிகிச்சைத் தேவை. விந்தணுக்களுக்கு மிக அதிக அளவில் ஒவ்வாமை ஏற்படும் ஒருவர் இந்த கோளாறால் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது.
பலரும் விந்தணுக்களை பற்றி அறியாத ஒரு விஷயம் என்னவெனில் இது முடியின் ஆரோக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்குகிறது. இது உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றும். சில முடி சிகிச்சைகள் இதைப் பயன்படுத்தவும் செய்கின்றன.
ஒரு மனிதனின் உடல் விந்தணுக்களை குளிராக வைக்க முயற்சிப்பதற்கான காரணம், அதிக வெப்பநிலை காரணமாக விந்து செல்கள் இறக்காமல் இருப்பதை உறுதி செய்வதாகும். அதனால்தான் ஆண்கள் இறுக்கமான உள்ளாடைகளை அணிய வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விந்தணுக்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அதனால்தான் இது சில வகையான முக சிகிச்சைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இது உங்கள் சருமத்தை மென்மையாக்கவும், பளபளப்பாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
விந்தணுக்களின் வடிவத்திற்கு பின்னாலும் ஒரு காரணம் உள்ளது. விந்தணுக்களின் தலை ஈட்டி-தலையின் வடிவத்தில் இருப்பதற்கான காரணம், அது முட்டையின் கலத்தை தோண்டி ஊடுருவ வேண்டும்.
விந்தணுக்கள் சில செல்களைக் கொண்டிருக்கின்றன, அவை ஆண் குழந்தையாகவும், சில பெண் குழந்தைகளாகவும் மாறக்கூடும். வெளியேறிய விந்து 5 நாட்கள் வரை உயிர்வாழும். இது யோனியில் இருக்கும் அமிலத்தன்மையிலிருந்து விந்தணுக்களைப் பாதுகாக்கும் வேலையை செய்கிறது.
விந்தணுக்களின் இயக்கம் அல்லது அதன் வடிவம் போன்ற காரணங்களால் முட்டையை அடையும் திறன் இல்லாத அந்த விந்தணுக்களையும் இது நிராகரிக்கிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.