விலாஎலும்பு முறியும் அளவிற்கு பெண் ஊழியரை கட்டியணைத்த குற்றத்திற்கு சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருக்கும் ஹுனான் மாகாணத்தைச் சார்ந்த பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இது குறித்த வழக்கில், “நான் எனது அலுவலகத்தில் பணியாற்றி வரும்போது, என்னுடன் பணியாற்றி வரும் ஆண் ஒருவர் என்னை விலா எலும்புகள் நோக இறுக்கி கட்டியணைத்தார்.
இதனால் எனது மார்பில் 3 விலா எலும்புகள் முறிந்துள்ளன. எனக்கு இந்த சமயத்தில் மருத்துவ செலவு ஏற்பட்ட நிலையில், விடுப்பு எடுத்ததால் சம்பளமும் கிடைக்காமல் போனது. இதனால் உரிய நபரிடமிருந்து தனக்கு தகுந்த இழப்பீடு வசூல் செய்து தர வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் விசாரித்த யூன்ஷி மாகாண நீதிமன்றம் சம்பந்தப்பட்டவருக்கு 1500 டாலர் அபராதம் விதித்து இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.