Home செய்திகள் லஞ்ச் பாக்ஸ் துர்நாற்றத்தை எப்படி அகற்றுவது..? இதை செய்தாலே போதும்..!

லஞ்ச் பாக்ஸ் துர்நாற்றத்தை எப்படி அகற்றுவது..? இதை செய்தாலே போதும்..!

249
0

பள்ளி, கல்லூரி, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் எளிதாக நண்பர்களை உருவாக்கவும், அனைவருடனும் மனம் விட்டு பேசவும் மதிய உணவு இடைவேளை பயனுள்ளதாக இருக்கிறது.

மதிய உணவிற்காக எல்லாரும் ஒரே மேஜையில் அமர்ந்திருக்கும் போது , டிபன் பாக்ஸை திறந்ததும் உணவின் மணமணக்கும் வாசனைக்குப் பதிலாக துர்நாற்றம் வீசினால் எப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?.

ஏனெனில் இந்திய சமையலில் ஏராளமான மசாலா வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதன் ஸ்ட்ராங்கனா வாசனை மறுநாளும் கூட டிபன் பாக்ஸை விட்டு செல்லமாட்டேன் என அடம்பிடிக்கலாம். இதனால் தயிர் சாதத்தில் இருந்து மீன்குழம்பு வாசனையையும், பன்னீர் பட்டர் மசாலாவில் பிரியாணியின் வாசனையையும் நீங்கள் உணர வேண்டி வரலாம். இப்படிப்பட்ட தர்மசங்கடமான சூழ்நிலைக்கு நீங்கள் ஆளாகமால் தடுக்கக்கூடிய சில குறிப்புகள் பற்றி இங்கே பார்க்கலாம்…

லஞ்ச் பாக்ஸை ஃப்ரீசரில் வையுங்கள்

வாசனையான மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அடங்கிய உணவை சாப்பிட்ட பின்னர், லஞ்ச பாக்ஸை எத்தனை முறை தேய்த்து, தேய்த்து கழுவினாலும் வாசனை மட்டும் போகாமல் அப்படியே தங்கிவிடலாம். சுத்தமாகவும், நேர்த்தியாகவும் லஞ்ச் பாக்ஸை கிளீன் செய்த பிறகும் வாசனை போகவில்லை என்றால், அதன் மூடியை திறந்து ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். ஏனெனில் குளிர்ச்சியான வெப்பநிலை எப்பேர்ப்பட்ட வாசனைகளையும் அகற்ற உதவும். லஞ்ச் பாக்ஸில் உள்ள வாசனையைப் போக்க அதனை குறைந்தது 3-4 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் ஃப்ரீசரில் வைத்திருக்க வேண்டும்.

ஒயிட் வினிகர் உதவியை நாடுங்கள்

ஒயிட் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் துர்நாற்றத்தை உருவாக்க கூடிய பாக்டீரியாவை அழித்து, லஞ்ச் பாக்ஸில் இருந்து வீசும் கெட்ட வாசனையை அகற்ற உதவுகிறது. பருத்தி துணி அல்லது பேப்பர் டவலை வினிகர் கலந்த தண்ணீரில் நனைத்து, லஞ்ச் பாக்ஸுக்குள் சிறிது நேரம் வைத்திருக்கவும். அதன் பின்னர் திறந்து பார்த்தால் துர்நாற்றம் மாயமாய் மறைந்திருப்பதை உணர முடியும்.

உருளைக்கிழங்கும் உதவும்

துர்நாற்றம் வீசக்கூடிய லஞ்ச் பாக்ஸை உப்பு சேர்க்கப்பட்ட உருளைக்கிழக்கு துண்டுகளைக் கொண்டு அழுத்தி தேய்க்க வேண்டும். பின்னர் 15-20 நிமிடங்கள் உருளைக்கிழங்கு தேய்க்கப்பட்ட லஞ்ச பாக்ஸை மூடிவைக்கவும். அதனைத் தொடர்ந்து லஞ்ச் பாக்ஸை தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்தினால் அதில் இருந்த துர்நாற்றம் காணாமல் போய் இருக்கும்.

பேக்கிங் சோடாவை பயன்படுத்தவும்

ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் எளிதாக கிடைக்கக்கூடிய பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தி கறைகளை மட்டுமல்ல, லஞ்ச் பாக்ஸில் இருந்து வரும் துர்நாற்றத்தையும் அகற்ற முடியும். பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து கெட்டியான பேஸ்ட்டை தயார் செய்து கொள்ளவும். அதனை லஞ்ச் பாக்ஸிற்குள் அப்ளே செய்து, 10-12 நிமிடங்கள் ஊறவிடவும். அதன் பின்னர் பேப்பர் டவல் கொண்டு லஞ்ச் பாக்ஸை சுத்தப்படுத்தினால், துர்நாற்றமும் அதனுடன் சேர்ந்து வெளியேற்றப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here