Mon, Dec5, 2022

#Trending

உங்கள் துணை உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லையா? என்ன செய்யலாம்?

கணவன் மனைவி என்று வரும் போது, உடல் ரீதியான நெருக்கமும், பாலியல் உறவில் திருப்தியும் மட்டும் போதாது. உணர்வு ரீதியாக, உணர்ச்சி பூர்வமாக ஒருவர் மற்றவரைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும், மற்றவரின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் அவருக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டும். ஆனால், பலரும், தங்கள் கணவன்/மனைவி முக்கியமான தருணங்களில் மிகவும் இன்சென்சிடிவ்வாக நடந்து கொள்வதாக புகார் அளித்து வருகின்றனர்.

அதாவது, தங்களின் உணர்வைப் புரிந்து கொள்ளக் கூட முயற்சிக்கவில்லை என்று கூறுகின்றனர். கோபமும், வருத்தமும், மகிழ்ச்சியும் எந்த உறவிலும் மாறி மாறி வரும். உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை என்றால், அது உறவில் விரிசல் ஏற்படுத்தி விடும். உங்கள் வருத்தம், கண்ணீர், ஏமாற்றம், உள்ளிட்ட உணர்வுகளால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உங்கள் பார்ட்னர் புரிந்து கொள்ளவில்லை என்றால் அவரை எப்படி கையாள்வது எப்படி?

உங்கள் துணை உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லையா?

நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள்

உங்கள் பார்ட்னர் உங்களுக்கு இன்சென்சிடிவ்வாக இருந்தால் என்ன, நீங்கள் அவரிடம் அன்பாகவும், கனிவாகவும் நடந்து கொள்ளுங்கள். உரிய இடத்தில் அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுங்கள். அவர் உங்களை மதிக்காமல் நடந்தால், நீங்களும் அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், அதே நேரத்தில் அவரின் அவமரியாதையை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவசியம் இல்லை. எதுவாக இருந்தாலும், உங்களிடம் பகிரலாம் என்பதை அவருக்கு நீங்கள் அமைதியாக புரிய வைக்க வேண்டும்.

உங்கள் துணை உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லையா?

சூழலை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்

சிலர், தங்களுக்கு கணவன்/மனைவி இருப்பதையே மறந்து, எதை செய்தாலும் தனியாக, தான் விரும்படி செய்யும் பழக்கம் கொண்டிருப்பார்கள். அவர்களாக விரும்பினால் தான் தன்னுடைய பார்ட்னரிடம் பேசுவார்கள், சொல்ல விரும்புவதை சொல்லுவார்கள். அப்படி ஒரு சூழலில் நீங்கள் இருந்தால், அவர் உங்களை இக்னோர் செய்ய முடியாதவாறு எல்லாவற்றையும் நீங்களே செய்து, சூழ்நிலையை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். ஷாப்பிங் செல்வது, முதலீடு, சேமிப்பு, குழந்தைகளை வெளியே அழைத்து செல்வது, விடுமுறை என்று நீங்கள் திட்டமிட்டு, அதை செயல்படுத்துங்கள். அவ்வாறு செய்யும் போது, உங்கள் பார்ட்னர் உங்களை தவிர்க்கக் கூடாது என்பதை அமைதியாகப் புரிய வைக்கவும்.

உங்கள் கணவன் - மனைவி

பொறுமை அவசியம்

எந்தவிதமான காரணமும் இல்லாமல் திடீரென்று உங்கள் பார்ட்னர் உங்களை உதாசீனப்படுத்த மாட்டார். அதற்கு நீங்கள் சம்மந்தப்படாத வேறு எந்த காரணமாகவும் இருக்கலாம். எனவே, அவர் அப்படி நடந்து கொள்வதற்கு காரணம் என்பதை அறிந்து கொள்ளும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். வெளிப்படையாகவும், நிதானமாகவும் பேசி புரிய வைப்பது உதவும்.

அவரை நிராகரிக்க வேண்டாம்

உணர்வுகளை மதிக்காமல் இருப்பது, அவரும் ஏதோ காயப்பட்டிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. மேலும் சிலருக்கு தங்கள் உணர்வுகளை எப்படி சரியாக வெளிப்படுத்த வேண்டும் என்பது தெரியாது. உங்கள் கணவன்/மனைவி செய்வது தவறு என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும், ஆனால் அவரை முழுமையாக நிராகரிக்கக் கூடாது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities