நெருப்புச் சூட்டில் பனிக்கட்டி உருகுவது போல, வெண்ணெய்யானது நெய்யாக உருகுவது போல, விந்து இழப்பு சிலருக்கு நேரலாம்.
தூக்கத்தில் ஆண்களுக்கு விந்து இழப்பு ஏற்படும். இயற்கையாக, இயல்பாக ஏற்படுவதில் பயமில்லை. ஆனால், தினமும் அவ்வப்போது தூக்கத்தில் விந்து இழப்பு ஏற்பட்டால் என்ன பிரச்சனை எனப் பார்க்க வேண்டியதாக இருக்கும். நெருப்புச் சூட்டில் பனிக்கட்டி உருகுவது போல, வெண்ணெய்யானது நெய்யாக உருகுவது போல, விந்து இழப்பு சிலருக்கு நேரலாம்.
காரணம் என்ன?
உடலில் அதிகம் சூடு ஏற்பட்டால், உடலுக்குள் வெண்ணெய் போன்று இருந்த விந்து உருகித் தானாகத் தூக்கத்தில் அல்லது சிறுநீர் பிரியும்போது வெளியேறி விந்து இழப்பு ஏற்படுகிறது. இதற்குக் காரணம் உடல் சூடு, ஜீன்ஸ் தொடர்ந்து நீண்ட நேரம் அணிதல், இறுக்கமான ஆடைகள், மன அழுத்தம், உடல் பலவீனம், அளவுக்கு மிகுதியான உடலுறவு பழக்கம், சுய இன்பம் அளவுக்கு மீறி இருத்தல்.
விந்து இழப்பால் உடல் என்னவாகும்?
‘விந்து விட்டவன் நொந்து கெட்டான்’ எனச் சொல் வழக்கம் உண்டு. அதிக விந்து இழப்பால் உடல் பலவீனமாகிப் போகலாம். நரம்புத் தளர்ச்சி, கண் பார்வைக் குறைபாடு, ஆண்மைக் குறைவு ஆகிய குறைபாடுகள் வரலாம். எனவே விந்து இழப்பைத் தவிர்க்க உடற்சூடு இருந்தால், தணிக்க வேண்டும். சுய இன்பம் அளவாக வைத்துக்கொள்ள வேண்டும், தேவைக்கு ஏற்ப… அதேபோல உடலுறவை வாரம் 3-4 முறை வைத்துக்கொள்ளலாம். சில நாட்கள் ஓய்வு எடுக்கவும் செய்யலாம். உடல் மீண்டும் பலமாக 48 நாட்களுக்கு உடலுறவு இல்லாமல், உடல் புதுப்பிக்க ஓய்வு, நல்ல உணவுகளைச் சாப்பிட்டு இருக்கலாம்.
உடல் சூடு ஏறாமல் தடுப்பது எப்படி?
தேவைக்கு ஏற்ப தண்ணீர் அருந்தும் பழக்கம் நல்லது. தாகத்துக்கு ஏற்ப தண்ணீர் அருந்தவும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். தண்ணீரால் எனிமா எடுப்பது நல்லது. இருமுறை குளித்தல் நல்லது. வெந்நீர், இளஞ்சூடான நீர் தவிர்த்து சாதாரண நீரில் குளித்தல் நல்லது. நீண்ட நேரம் குளிக்கலாம். முடி முதல் பாதம் வரை குளிக்க வேண்டும். பாத் டப் அல்லது தண்ணீர் தொட்டியில் நீண்ட நேரம் மூழ்கிக் குளிக்கலாம். குளம், கிணறு, ஆறு ஆகியவை அருகிலிருந்தால் அங்குச் சென்று அவ்வப்போது குளிக்கலாம்.
சில பயிற்சிகள்…
- சீத்காரி எனும் பிராணாயாமங்கள் செய்வதன் மூலம் காற்றில் உள்ள ஈரப்பதம் உடலுக்குள் சென்று, உடற்சூட்டைத் தணிக்கும். சரியான யோகா நிபுணரிடம் கற்றுக்கொள்ளவும்.
- ஓய்வு சமயத்தில் அடிவயிற்றில் அவ்வப்போது ஈரத்துணி கட்டிக்கொண்டால் அடிவயிறு குளிர்ச்சியாகும். மண் குளியல் எடுக்கலாம். மட் பாத் எனச் சொல்வார்கள். சித்தா, இயற்கை மருந்தகங்களில் புற்று மண் கிடைக்கும். அதைப் பயன்படுத்தலாம்.
- எலுமிச்சம் பழச்சாற்றில் பனைவெல்லம், நீர் கலந்து தினமும் குடித்துவர உடற்சூடு தணியும்.
- வெறும் வயிற்றில் இடுப்பு குளியல், பாத் டப் குளியல் எடுக்கலாம்.
- காலை, இரவு இயற்கை உணவு அதாவது சமைக்காத உணவுகளும் மதியம் மட்டும் சமைத்த உணவுகளும் சாப்பிடலாம்.
- குறிப்பாகச் சப்போட்டா பழத்தை சீசன் சமயத்தில் அவசியம் சாப்பிடலாம்.
- தூதுவளை, முருங்கைக்கீரையை உணவில் சேர்க்கவும்.
- தூக்கத்தில் விந்து நட்டம் இருப்பவர்கள், இரவில் அதிகத் தண்ணீர் பருகக் கூடாது. படுக்கச் செல்லும் முன் சிறுநீர் கழிக்கவும்.
- இரவில் பாலியல் கதைகள், படங்கள் தவிர்க்கவும்.
- பெரும்பாலும் அதிகாலை 3-4 மணியளவில் தான் தூக்கத்தில் விந்து இழப்புத் தானாக நிகழும். எனவே, அதிகாலை 3-4 மணியளவில் சிறுநீர் கழித்துவிட்டு மீண்டும் தூங்கலாம்.
மூலிகை மருத்துவம்
மாம்பழ விதையின் பருப்பைக் காயவைத்து வறுத்துப் பொடி செய்து, அரைத் தேக்கரண்டி எடுத்துத் தண்ணீரில் கலந்து நாள்தோறும் ஒருவேளை வீதம் ஒரு மாதம் அருந்தி வந்தால், விந்து தானாகக் கழிவது நின்றுவிடும்.
50 மி.லி தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றில் 5 கிராம் சந்தனம் அரைத் தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் விந்து இழப்பு குறையும்.
5 கிராம் அதிமதுரம், 5 கிராம் சந்தனம் இரண்டையும் பொடித்துத் தேனில் குழைத்து இரவில் சாப்பிட்டு வந்தாலும் தானாக விந்து இழப்பு ஏற்படுவது குறையும்.
ஆவாரம் பூ டீ செய்து அருந்தி வந்தால் விந்து இழப்பு இருக்காது.
பிரமி இலையை உலர்த்திப் பொடி செய்து, தேங்காய்ப் பாலில் கலந்து குடிக்கலாம்.
துளசி வேரைப் பொடியாக்கி, வெயிலில் காய வைத்து, இடித்துத் தூள் செய்யவும். ஒரு தேக்கரண்டி தூளுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து இருவேளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வர 15 நாட்களுக்குள் விந்து இழப்புப் பிரச்சனை குணமாகும்.