Wed, Sep28, 2022
HomeTop Newsஉங்க வீட்ல இந்த வாட்டர் ஹீட்டர் இருக்கா? ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள நீங்க முதல்ல இதை...

உங்க வீட்ல இந்த வாட்டர் ஹீட்டர் இருக்கா? ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள நீங்க முதல்ல இதை கட்டாயம் தெரிஞ்சுக்கணும்

HTML tutorial

முதியவர்கள், குழந்தைகள், அவசர அவசரமாக வேலையை செய்பவர்கள் இருப்பவர்களுடைய வீட்டில் கூடுமானவரை இந்த மாதிரியான வாட்டர் ஹீட்டரை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். வேறு வழியே இல்லை. விலை மலிவாக இருக்கிறது.

சுடுதண்ணீர் போடுவதற்கு வசதியாக உள்ளது என்பவர்கள் இந்த வாட்டர் ஹீட்டர் வாங்கி பயன்படுத்துகிறார்கள். அதில் ஒன்றும் தவறு கிடையாது. ஆனால் கவனக்குறைவாக இந்த வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தும்போது நமக்கு அதன் மூலம் சில சிக்கல்கள், ஆபத்துக்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வாட்டர் ஹீட்டரை பயன்படுத்துவதற்கு முன்பாக நாம் என்னென்ன விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

குறிப்பு 1:

முதலில் இந்த வாட்டர் ஹீட்டரை பயன்படுத்துபவர்கள் கூடுமானவரை பிளாஸ்டிக் பக்கெடில் தண்ணீர் ஊற்றி சூடு செய்யும் பழக்கத்தை விட்டு விடுங்கள். இரும்பு பக்கத்திலும் தண்ணீரை ஊற்றி சூடு செய்யக்கூடாது. அதை தவிர்த்து வேறு ஏதாவது மெட்டலில் இருக்கக்கூடிய பக்கெட்டை தண்ணீர் சூடு செய்வதற்காக பயன்படுத்த வேண்டும். அதிகப்படியாக சூடாகி பிளாஸ்டிக் பக்கெட் உருகி உள்ளே இருக்கும் தண்ணீர் வெளியேறினாலும் பிரச்சனை. இரும்பு, மின்சாரத்திற்கு ஆகாத ஒரு உலோகம். ஆகவே இரும்பு பக்கெட்டில் இந்த வாட்டர் ஹீட்டரை போடவே கூடாது.

குறிப்பு 2:

வாட்டர் ஹீட்டரை தண்ணீரில் போடுவதற்கு முன்பு பக்கெட்டில் தண்ணீர் நிரப்புவீர்கள் அல்லவா. அந்த அளவு சரியாக இருக்க வேண்டும். பக்கெட்டில் தண்ணீர் மிகவும் குறைவாகவும் இருக்கக் கூடாது. தண்ணீர் மிகவும் அதிகமாகவும் இருக்கக் கூடாது. ஹீட்டர் எந்த அளவுக்கு தண்ணீரில் மூழ்கி இருக்க வேண்டும் என்பதை அந்த ஹீட்டிரிலேயே குறிப்பிட்டிருப்பார்கள். அதை பார்த்துவிட்டு அந்த அளவுக்குத் தான் தண்ணீரை பக்கெட்டில் நிரப்ப வேண்டும்.

வாட்டர் ஹீட்டர் தண்ணீரில் எந்த அளவுக்கு மூழ்கி இருக்க வேண்டும் என்பதையும் அந்த இடத்தில் நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். இப்படி பககெட்க்கு உள்ளே மூழ்க வைக்கும் வாட்டர் ஹீட்டரை, எக்காலத்தைக் கொண்டும் பக்கெட்டில் சாய்த்து வைக்கக்கூடாது. பக்கெட்டில் நடுப்பகுதியில் தான் வாட்டர் ஹீட்டர் இருக்க வேண்டும். (அதற்காக வாட்டர் ஹீட்டரை ஒருவர் கையில் பிடித்துக் கொண்டே இருக்க முடியாது. விட்டுவிட்டால் சாய்ந்து தான் போகும் அல்லவா.) பக்கெட்டுக்கு குறுக்கே ஒரு கட்டையை போட்டு, அதில் அந்த ஹீட்டரை சொருகி வைக்க வேண்டும். அதுதான் சரியான முறை. கிணற்றில் கட்டைக்கு நடுவே ராட்டினம் எப்படி தொங்கும். அதே போல நீங்க ஹீட்டரை செட் பண்ணி வச்சுக்கணும்.

குறிப்பு 3:

ஹீட்டருடைய ஃபிளக்கை சொருகக் கூடிய ஸ்விட்ச் போர்டில் கட்டாயமாக எர்த் புதைத்து வைத்திருக்க வேண்டும். எர்த் இல்லாத ஸ்விட்ச் போர்டில் ஹீட்டரை போடுவது மிக மிக ஆபத்தானது. எர்த் உள்ள ஸ்விட்ச் போர்டு ஆக இருந்தாலும் சரி, எர்த் இல்லாத ஸ்விட்ச் போர்டு ஆக இருந்தாலும் சரி, ஹீட்டரை தண்ணீருக்குள் வைத்து விட்டு அப்படியே தண்ணீருக்குள் கையை விட்டு தொட்டு பார்க்கக் கூடாது. ஸ்விட்சை அணைத்துவிட்டு ஃபிளக்கை ஸ்விச் போர்டில் இருந்து எடுத்துவிட்டு தான் தண்ணீரை நீங்கள் தொட வேண்டும்.

அதேபோல் சுவிச்சை ஆஃப் பண்ணிவிட்டு ஃபிளக்கை எடுத்துவிட்டு, உடனடியாக தண்ணீரிலிருந்து ஹீட்டரை வெளியே எடுக்கக் கூடாது. இரண்டு நிமிடம் கழித்து தான் சுடுகின்ற தண்ணீரில் இருந்து ஹீட்டரை வெளியே எடுக்கணும். இப்படி வெளியே எடுத்த ஹீட்டரை முடிந்தால் ஜில்லுனு இருக்கும் தண்ணீரில் இரண்டு நிமிடம் வைப்பது நல்லது. ஹீட்டர் வெகு நாட்களுக்கு நன்றாக இருக்க இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.

தண்ணீருக்குள் போடாமல் வெறும் ஹீட்டரை அப்படியே கரண்டில் வைத்து ஸ்விட்ச் போட்டு விட்டு விட்டாலும் அது நமக்கு ஆபத்து தான். அந்த வாட்டர் ஹீட்டர் அதிகமாக சூடாகி எரிந்து நெருப்பு பிடித்து ஆபத்தை கொடுத்து விடும். ஆகவே அதிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். எப்படி பார்த்தாலும் இந்த ஹாட் வாட்டர் ஹீட்டரில் நமக்கு நிறைகளை விட குறைகள் தான் அதிகமாக இருக்கிறது. ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா கையாள வேண்டிய விஷயம் இது. நிறைய ஆபத்துகள் உண்டானதை நிறைய செய்திகளில் நாம் படிக்கின்றோம்.

இருப்பினும் அடுத்தடுத்த ஆபத்துக்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றது. கூடுமானவரை இந்த வாட்டர் ஹீட்டரை குழந்தைகள் இருக்கும் வீட்டில் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. அப்படி குழந்தைகள் இருக்கும் வீட்டில் பயன்படுத்தினாலும் பாத்ரூமுக்கு உள்ளே இந்த வாட்டர் ஹீட்டர் வைத்து கதவை தாழ்ப்பாள் போட வேண்டும். அந்த பக்கம் குழந்தைகள் போகவே கூடாது. எந்த எலக்ட்ரானிக் பொருளாக இருந்தாலும் அதற்கென்று ஒரு விதிமுறைகள் கட்டுப்பாடு உள்ளது. அதை பார்த்து படித்து கவனத்துடன் பயன்படுத்துவதன் மூலமாகத்தான் அதில் வரும் ஆபத்திலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடியும். அப்படித்தான் இந்த வாட்டர் ஹீட்டர். உங்க வீட்ல இந்த வாட்டர் ஹீட்டர் இருந்தா மேலே சொன்ன குறிப்புகள் எல்லாம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க