கிருஷ்ணகிரி மாவட்டம் பூந்தோட்டம் ரயில்வே காலனியைச் சேர்ந்த சுந்தரம் என்பவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி அவரது பிள்ளைகளுடன் தாய் வீட்டுக்கே நிரந்தரமாகச் சென்று விட்டார். இந்தநிலையில் சுந்தரம், தனது இரண்டாவது மனைவி லட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
சுந்தரம் தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 19ம் தேதி இரவு மது போதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், மனைவியை உடலுறவுக்கு அழைத்துள்ளார்.
ஆனால் மறுநாள் காலை கோயிலுக்குச் செல்ல உள்ளதாகக் கூறி உடலுறவுக்கு மனைவி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தரம், வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தலைமறைவான சுந்தரத்தை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் சுந்தரம்.