போலீஸ் அதிகாரி போன்று நடித்து காதல் ஜோடிகளை மிரட்டி நகை பறித்து வந்த சிவராமன் என்கிற 38 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன காப்பான்குளத்தை சேர்ந்த சிவராமன் போலீசாரிடம் கூறியதாவது, நான் தினமும் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறித்து வந்தேன். சிறு வயதில் இருந்தே நடிகைகள் என்றால் ரொம்ப பிடிக்கும்.
அதனால் கொள்ளையடித்த நகையை விற்று பணமாக்கி ஸ்டார் ஹோட்டல்களில் அறையை புக் செய்து புரோக்கர்கள் மூலம் சின்னத்திரை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து வந்தேன் என்றார்.
முன்னணி டிவி நடிகைகள், நிகழ்ச்சி தொகுப்பாளினிகளுடன் உல்லாசமாக இருந்திருக்கிறேன். அவர்களுடன் உல்லாசமாக இருக்க ரூ. 40 முதல் ரூ. 50 லட்சம் செலவு செய்துள்ளேன்.
4 எழுத்து கொண்ட தொகுப்பாளினிக்கு அதிகபட்சமாக ஒரு மணிநேரத்திற்கு ரூ. 40 ஆயிரமும், 5 எழுத்து கொண்ட தொகுப்பாளினிக்கு ரூ. 50 ஆயிரமும் கொடுத்திருக்கிறேன் என சிவராமன் மேலும் தெரிவித்துள்ளார்.
நான் கருப்பாக இருந்ததால் பெண்களுக்கு பிடிக்கவில்லை. ஆனால் பணம் இருந்தால் நிறமோ, அழகோ முக்கியம் இல்லை என்பதை நடிகைகளிடம் தெரிந்து கொண்டேன்.
நடிகைகள், தொகுப்பாளினிகளுடன் உல்லாசமாக இருப்பதற்காகவே நகைகளை கொள்ளையடித்தேன். இதில் நான் யாரையும் கூட்டு சேர்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார் சிவராமன்
தன்னுடன் உல்லாசமாக இருந்த 10 முன்னணி நடிகைகள், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை போலீசாரிடம் கொடுத்திருக்கிறார் சிவராமன். அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.