Malayagam
Home » பார்க்கில் தூங்கினேன், காய்கறி விற்றேன்.. 18 வருடம் போராட்டம்! இமான் அண்ணாச்சியின் கதை

பார்க்கில் தூங்கினேன், காய்கறி விற்றேன்.. 18 வருடம் போராட்டம்! இமான் அண்ணாச்சியின் கதை

இமான் அண்ணாச்சி அவர் கடந்து வந்த பாதை பற்றிய கதையை சொன்னார். மற்றவர்கள் கண்ணீர் வரும் வகையில் சொன்ன நிலையில் இவர் மட்டும் அதை ஜாலியாக சிரிக்க வைக்கும் வகையில் சொன்னார்.

என் பெயர் இம்மானுவேல். என் ஊர் தூத்துக்குடி மாவட்டம் எரல். எனக்கு சின்ன வயதில் இருந்தே சினிமாவில் காமெடியனாக நடிக்க வேண்டும் என்பது ஆசை. அதை போகிற போக்கில் ஒருவர் தூவிட்டு போனார். எல்லோரையும் சிரிக்க வெச்சிட்டிருக்கியே நீ ஏன் சினிமாவில் நடிக்க கூடாது என கேட்டார்.

அதே கேள்வி எனக்கும் வந்தது. உடனே சென்னைக்கு கிளம்பினேன். சென்னை எக்மோரில் வந்து இறங்கியதும் பாரதிராஜா, பாரதி ராஜா, கஸ்தூரி ராஜா அவர்கள் ஆளுக்கொரு வண்டி வைத்து எனக்காக காத்திருப்பார்கள் என பார்த்தேன்.

ஆனால் கடைசியில் இரண்டு போர்ட்டர் தான் நின்றார்கள். கையில் ஒரே ஒரு மஞ்சப்பை, ஷேர் ஆட்டோ பிடித்து பனகல் பார்க் போனேன். அப்போது அது தான் காசு கொடுக்காமல் தாங்கும் விடுதியாக அப்போது இருந்தது. என்னை போன்ற சினிமா கலைஞர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்றது பனகல் பார்க் மட்டுமே.

வேறு வழி இல்லாமல் ஒரு மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு ஒரு மாதம் தான் இருக்கமுடிந்தது. நான் ஞாயிற்றுக்கிழமை பல இடங்களுக்கு சென்று வருவதை கண்டுபிடித்து நான் சினிமாவில் நடிக்க தான் வந்திருக்கிறேன் என்கிற உண்மை ஓனருக்கு தெரிந்துவிட வேலையில் இருந்து அனுப்பிவிட்டார்கள்.

அதன் பின் ஒரு கேமரா விற்கும் பெரிய கடைக்கு போனேன். அங்கு ஓனரிடம் வேலை கேட்டேன். அவர் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர், அங்கு இருக்கும் எல்லோரும் ஆங்கிலம் மட்டுமே பேசுவார்கள், நான் மட்டும் தான் தமிழ்.

என்ன வேலை தெரியும் என கேட்டார், எல்லா வேலையும் தெரியும் என கூறினேன். நாளைக்குவந்து வேலைக்கு சேர்ந்துகொள் என கூறினார், இல்லை இப்போதே செருகிறேன் என சொல்லி சேர்ந்துவிட்டேன். அதன் பின் மேல் மாடியில் தங்க இடம் கொடுத்தார்.

அதன் பிறகு தான் என் முக்கிய நண்பர் ராஜாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு சாப்பாட்டுக்கே கஷ்டமாக இருக்கிறது ஒரு ஆயிரம் ருபாய் கிடைக்குமா என அண்ணனுக்கு லெட்டர் எழுதினேன்.

அவர் உடனே ட்ரங்க் கால் செய்து அங்கு இருக்கும் செக்யூரிட்டியிடம் பேசி இருக்கிறார். ‘என் நண்பர் 1000 ருபாய் கொடுப்பார், அதை வாங்கி என் தம்பியிடம் கொடுத்துவிடு’ என சொல்லி இருக்கிறார். அதையும் அவர் வாங்கி கொடுத்தார்.

அன்று நான் நிம்மதியாக சாப்பிட்டேன். அப்போது இட்லி 1 ருபாய், பூரி 1 ருபாய், சாப்பாடு ஆறு ருபாய்.. நான் 90 ரூபாய்க்கு சாப்பிட்டேன். மீதம் இருக்கும் 910 ரூபாயை பையில் வைத்துகொண்டு தூங்கினேன், எழுந்து பார்த்தால் 10 மட்டும் தான் இருந்தது, 900 காணவில்லை. அதை யார் எடுத்தார் என தெரியவில்லை.அவர் தற்போது ஷோ பார்த்துக்கொண்டிருந்தால் நன்றி.

இப்படி ஆரம்பித்த என் வாழ்க்கை, நாளைக்கு விடிந்துவிடும் என எதிர்பார்ப்போடு நகர்ந்தது. 18 வருடங்கள் காய்கறி வியாபாரம் ரோட்டில் பார்த்தேன். என் அம்மாவுக்கும் பணம் அனுப்பவேண்டும். அதனால் இதை செய்து கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் எனக்கு திருமணம் ஆகிவிடுகிறது என மனைவி பெயர் ஆக்னஸ் பிரியா. ஒன்னுமே இல்லாத எனக்கு 25 பவுன் போட்டு திருமணம் செய்து கொடுத்தார்கள். அதன் பிறகு கஷ்டத்தில் வாழ்க்கையை ஓட்டுவதற்காக என் மனைவி நகைகள் ஒவ்வொன்றாக கழற்றி கொடுத்தார். சினிமாவில் ஜெயித்த பிறகு அவருக்கு 100 பவுனாக திருப்பி கொடுத்துவிட்டேன்.

18 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு டிவியில் கூப்பிட்டார்கள், சுத்தமாக தமிழ் பேச வேண்டும் என சொன்னார்கள். அங்கு ஆரம்பித்த கலை பயணம் தான இது. நான் அதற்கு முன்பு டிவியில் சின்னதாக தோன்றி இருக்கிறேன்.

முதல் வாய்ப்பு கொடுத்தது விஜய் டிவி கலக்கப்போவது யாரு சீசன் 1 தான். அதன் பின் விஜய் டிவியில் தொடர முடியவில்லை, வேறொரு தனியார் டிவியில் வாய்ப்பு கிடைத்தது. அதில் என் 100 சதவீதத்தை கொடுத்ததால் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது.

உங்களுக்கு வாய்ப்பு ஒருமுறை தான் வரும், அதில் 100 சதவீதம் நிரூபித்தால் தான் ஒரு 20 சதவீதம் ரிட்டர்ன் வரும். அதன் பின் சன் டிவியில் குழந்தைகள் வைத்து (குட்டி சுட்டீஸ்) நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறேன்.

ஒரு ஆசை உடன் தான் வந்திருக்கிறேன். பிக் பாஸ் டைட்டிலை இதற்கு முன் ஒரு ஹீரோ ஜெயித்திருக்கிறார், ஒரு ஹீரோயின் ஜெயித்திருக்கிறார், இந்த முறை ஒரு காமெடியன் ஜெயிக்க வேண்டும் என்கிற ஆசையுடன் வந்திருக்கிறேன். அதனால் ரசிகர்கள் நான் டைட்டில் ஜெயிக்க கோடிக்கணக்கில் வாக்குகளை அள்ளி கொடுங்க என இமான் கேட்டிருக்கிறார்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed