HomeTop Newsநடிப்பை கைவிடும் நயன்தாரா.? விக்னேஷ் சிவன் கூறிய தகவல்.!

நடிப்பை கைவிடும் நயன்தாரா.? விக்னேஷ் சிவன் கூறிய தகவல்.!

தமிழ் சினிமாவில் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கப்படுபவர். நயன்தாரா இவரது நடிப்பில் வெளியான படங்கள் ஒவ்வொன்றிலும் இவரின் 100% உழைப்பு கண்டிப்பாக இருக்கும் ஏனென்றால் அவ்வளவு சிறந்த நடிகை. தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையும் இவர்தான் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லியே தெரிய வேண்டாம்.

ஆரம்ப காலகட்டத்தில், எவ்வளவு ரசிகர்கள் இருந்தார்களோ அதே போலவே இப்போது வரை அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் குறையவே இல்லை. ஐயா படத்தில் தொடங்கி காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வரை ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார் நயன்தாரா.

- Advertisement -

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 9-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில், திருமண வாழ்க்கையை தொடங்கிய நயன்தாரா இனிமேல் சினிமாவில் நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி எழும்பியுள்ளது. ஏனென்றால், கமிட் ஆன படங்களில் நடித்து முடித்த பிறகு திருமணம் செய்துகொள்ள நயன்தாரா திட்டமிட்டிருந்ததாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

- Advertisement -

இதனையடுத்து, ஜூன் 9 -ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட நயன்தாரா இனிமேல் திருமண வாழ்க்கையில் இணைவாரா அல்லது சினிமாவில் நடிப்பாரா என்று அவரது ரசிகர்கள் சோகத்துடன் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் ரசிகர்களை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், திருமணத்தை முடித்த கையோடு செய்தியாளர்களை சந்தித்து பேசிய விக்னேஷ் சிவன் -நயன்தாரா பல கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது பேசிய விக்னேஷ் சிவன் தங்களது சினிமா பயணம் தொடரும் என்று கூறியுள்ளார்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular