Save 20% off! Join our newsletter and get 20% off right away!

அஜித் காதை திருகுனது.. க்யூட் ஃப்ளாஷ்பேக் சொன்ன நதியா..

‘அப்போ இருந்த மாதிரியே இப்பவும் இருக்கீங்க’ என பட்டியலிடப்படும் தமிழ் சினிமா நடிகர்களில் நதியா பிரதானமானவர். ஆனால் அப்படி யாராவது சொன்னால் விளக்கம் கொடுத்துக் கொடுத்து போரடித்து விட்டதாகச் சொல்கிறார் அவர்.

அதுமட்டுமல்ல,’இளமையாக இருப்பதும் வயதுக்கும் தொடர்பில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எந்த அளவிற்கு நமக்கு பாசிட்டிவ்வான எண்ணங்களைத் தருகிறார்கள் என்பதைப் பொறுத்தது’ என்கிறார். அவரிடம் எடுத்த பேட்டியிலிருந்து சில சுவாரசியப் பகுதிகள்.

‘கிளாமர் என்பதற்கு சினிமா கொடுக்கும் அர்த்தமே வேற. எனக்கு அது பிடித்ததில்லை. சொல்லப்போனால் 70 வயது நபர் கூட கிளாமராக இருக்கலாம். அது நிச்சயம் உடையைப் பொறுத்தது அல்ல’ என்கிறார் அவர்.

அஜித் உங்களுடன் நடித்திருக்கிறாரே எனக் கேட்டதும் ஆச்சரியமாகக் கண்கள் விரிய விளக்கம் அளிக்கிறார். ‘என் வீடு என் கணவர் படத்தில் சுரேஷுடன் நான் நடித்தேன்.

அதில் குழந்தை நட்சத்திரமாக அஜீத் நடித்ததாக எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு அது ஞாபகமே இல்லை. திரும்பப் போய் படத்தைப் பார்க்க வேண்டும். என்னைப் பொருத்தவரை நான் பார்த்த வளர்ந்தவர்களில் இன்று அபரிமீதமாக வளர்ந்திருப்பவர் ஃபஹத் பாசில்தான்.

நான் பாசில் சார் ஷூட்டிங்கில் நடிக்கும்போது ஃபஹத்துக்கு 4 வயது. ஆனால் இன்று நடிப்பில் அசுரன். நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்கிறார்.

நதியா அண்மையில் நானி, நஸ்ரியா நடித்த அந்தே சுந்தரானிக்கி படத்தில் நடித்திருந்தார்.1988-இல் சிரிஷ் என்பவரை மணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.2008ல் லண்டனில் இருந்து இந்தியா வந்த இவர் இரண்டாவது இன்னிங்ஸாகப் பல படங்களில் நடித்து வருகிறார்