Wed, Sep28, 2022
HomeTop Newsபொடுகு தொல்லையா? கவலை விடுங்க.. அட்டகாசமான சில டிப்ஸ்

பொடுகு தொல்லையா? கவலை விடுங்க.. அட்டகாசமான சில டிப்ஸ்

HTML tutorial

பொதுவாக நம்மில் பெரும்பாலானோருக்கு பொடுகு பிரச்சனை இருக்கிறது.

ஊட்டச்சத்துக் குறைபாடு, ரசாயனங்கள் கலந்த பொருட்கள் என பொடுகு ஏற்படப் பல காரணங்கள் இருக்கின்றன.

இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்துவது சிறந்தது. இதற்கு சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

பஞ்சில் சில துளிகள் டீ-ட்ரீ ஆயிலுடன் சிறிதளவு தேங்காய் எண்ணையை கலந்து இந்தக் கலவையை உச்சந்தலை முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். ஒரு வாரத்தில் 3 முதல் 4 முறை மீண்டும் மீண்டும் செய்யவும்.

தேங்காய் எண்ணையை உங்கள் உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். ஒரு மணி நேரத்திற்கு அதை அப்படியே விட்டு விட்டு பிறகு ஒரு மிதமான ஷாம்பு கொண்டு அலசி விடுங்கள். நீங்கள் இதை வாரத்தில் 2 முறை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும்.

பாதி வெங்காயத்தை அரைத்து அதன் சாறைப் பிழிந்து வடிகட்டிக் கொள்ளவும். உச்சந்தலை முழுவதும் அதை தாராளமாக தடவவும். ஒரு மணி நேரம் அதை அப்படியே விட்டு விட்டு பிறகு அலசி விடவும். வாரத்தில் 2 நாட்கள் இந்த ஜூஸை உங்கள் உச்சந்தலையில் தடவவும்.

சிறிது கற்றாழை ஜெல்லை எடுத்து உங்கள் உச்சந்தலை முழுவதும் மசாஜ் செய்யுங்கள். தலையில் கற்றாழை ஜெல் முழுவதுமாக கிரகித்துக் கொள்ளப்பட்டதை உறுதி செய்யும் விதமாக வட்டப்பாதையில் மசாஜ் செய்யுங்கள். ஒரு மணி நேரம் கழித்து தலையை அலசி விடுங்கள். வாரத்தில் இரண்டு முறையாவது இந்த ஜெல்லை பயன்படுத்த வேண்டும்.

பூண்டை உரித்து நசுக்கிக் கொள்ளவும். இதை சூடான பேனில் ஆலிவ் ஆயிலுடன் சேர்க்கவும். கலவையை 5 நிமிடங்கள் சூடாக்கி பிறகு வடிகட்டி கொள்ளவும். ஆறியவுடன் உங்கள் உச்சந்தலையில் தேய்க்கவும். 30 முதல் 45 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பிறகு அலசி விடவும். வாரத்தில் இரண்டு முறை இந்த எண்ணையை தடவ வேண்டும்

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க