பிக்பாஸ் நிகழ்ச்சியின் எபிசோடில் சர்வாதிகாரி போல் நடப்பதாக அண்ணாச்சி கூறியதால் இசைவாணி கதறி அழுதார். பிக்பாஸ் வீட்டில் நெருப்பு காயினை கைப்பற்றியுள்ள இசைவாணிக்கு இந்த வாரம் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் கிச்சன் ஏரியா மட்டுமின்றி ஒட்டு மொத்த வீட்டிலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வருகிறார். ஆனால் இசைவாணி சொல்வது ரூடாக இருப்பதால் ஹவுஸ்மேட்டுக்கு அவர் மீது வருத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எபிசோடில் அண்ணாச்சி தான் சொல்வதை கேட்பதே இல்லை என சக ஹவுஸ்மேட்டுகளிடம் குறை கூறிக் கொண்டிருந்தார். மேலும் தான் கமல் சாரிடமே பேசிக் கொள்கிறேன் என்றார்.
அண்ணாச்சிக்கும் தனக்கும் ஆகவில்லை என்ற போதும், அவருக்கே வேலை கொடுத்து அவரை டார்கெட் செய்வது போல் நடந்து கொள்கிறார்.
இதனால் வருத்தத்தில் உள்ள அண்ணாச்சி, இசைவாணி இப்படி நடந்து கொள்வது குறித்து கேட்டார். அதற்கு பிக்பாஸ் தனக்கு கொடுத்த இன்ஸ்ட்ரக்ஷன்களை கூறினார். அப்போது அந்த கேப்டன் என்ன செய்வார் என்று விளக்கத்திற்காக கேட்டார். சாதாரணமாக சந்தேகங்களை கேட்பதாக கூறினார் இமான் அண்ணாச்சி.
வீட்டின் தலைவருடன் கலந்தாலோசித்துதான் நடந்து கொள்கிறீர்களா என்றும் கேட்டார் அண்ணாச்சி. இமான் அண்ணாச்சியின் பல கேள்விகளுக்கு அதை நீங்கள் பிக்பாஸிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார். இருவரும் சாதாரணமாகதான் பேசிக் கொண்டிருந்தனர்.
ஆனால் அண்ணாச்சி பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் கண்டுப்பிடித்து பேசினார் இசைவாணி. இதனால் நான் உன்னை தவறாக சொல்லவில்லை, நான் சொல்லும் கருத்தையும் கேட்டுக்கொள் என்றார். இதனால் ஒன்றுப்பட்டு ஒன்று இருவருக்கும் வார்த்தை போர் ஏற்பட்டது.
தொடர்ந்து பேசிய அண்ணாச்சி பேசுவதை முழுதாக கேட்காமல், பேசுகிறாய். இந்த காய்ன் உன் கைக்கு வந்த பிறகு நீ ஒரு சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறாய் என்றார்.
உன் நடவடிக்கை சர்வாதிகாரி போல் என் கண்ணுக்கு தெரிகிறது என்றார். இதனால் கோப்பட்ட இசைவாணி, ரெஸ்ட் ரூம்முக்குள் சென்று கண்ணீர் விட்டு அழுதார்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.