தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்து விட்டார்.
மேலும் ஒரு சில படங்களில் பெண்மையை மையமாக வைத்து எடுத்த படங்களில் நடித்து வெற்றியும் பெற்றார். அந்த வகையில் காற்றின் மொழி, ராட்சசி போன்ற படங்கள் அபார வெற்றியை பெற்றது.
ஆனால், இனிமேல் நடிக்க மாட்டேன் என முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியானது. எந்த வகையில் உண்மை என்று தெரியவில்லை. இந்த நிலையில் தான் நடித்த படத்தின் அனுபவத்தை பற்றி சமீபத்தில் ஜோதிகா கூறினார்.
அதாவது கமலுடன் இவர் நடித்த படம் வேட்டையாடு விளையாடு திரைப்படம். விமான நிலையத்தில் நள்ளிரவு 3 மணி அளவில் தான் சூட்டிங் எடுக்க அனுமதிப்பார்களாம்.
ஒரு காட்சியில் கமல் ஜோதிகாவிடம் விமான நிலையத்தில் வைத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் போது ஜோதிகா உடனே அழ வேண்டும். ஆனால் ஜோதிக்காவுக்கு சும்மாவே அழ வராதாம். அதுவும் 3 மணி என்னும் போது எப்படி என்னால அழ முடியாது என கூறினாராம்.
ஆனால் காற்றின் மொழி படத்தில் பெரும்பான்மையாக அழுதுகொண்டே இருப்பாராம். காரணத்தை கூறினார். அந்த நேரம் எனக்கு திருமணம் ஆக வில்லை. ஆகவே அந்த எமோஷன்ஸ் எதுவும் கிடையாது. அதனால் அழுகை உடனே வரவில்லை.
ஆனால் காற்றின் மொழி படத்தின் போது திருமணம் ஆகி இருந்தது. நிறைய எமோஷன்ஸ் இருக்கும் வீட்டில். குழந்தைகள், குடும்பம் என நிறைய இருக்கும். அதையெல்லாம் நினைத்து அழுகையை கொண்டு வருவேன் எனக் கூறினார்.