நவகிரகங்களில் குரு என்று அழைக்கப்படும் வியாழன் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. இந்த குரு ஒரு சுப கிரகமாகும். இந்த குரு 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து தனது சொந்த ராசியான மீன ராசிக்குள் நுழைந்தார்.
இந்நிலையில் 2022 ஜூலை 29 ஆம் தேதி மீன ராசியில் வக்ரமாக மாறி பயணிக்கவுள்ளார். இப்படி வக்ர நிலையில் நவம்பர் 24 வரை இருப்பார். ஒருவரது ஜாதகத்தில் குரு சுப நிலையில் இருந்தால், அவர் வாழ்வில் பெரிய முன்னேற்றத்தைக் காண்பார்.
சுப கிரகமான குரு வக்ரமாக இருக்கும் போது, நற்பலன்களை விட கெடு பலன்களையும், பிரச்சனைகளையும் கொடுப்பார். இப்போது மீன ராசியில் குரு வக்ரமாவதால் எந்த ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை, குறிப்பாக நிதி இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளது என்பதைக் காண்போம்.
குரு வக்ரம் என்றால் என்ன?
வக்ர நிலை என்பது பின்னோக்கி செல்லும் நிலையாகும். பொதுவாக இந்நிலை மோசமானதாக கருதப்படுகிறது. கிரகங்கள் நேராக பயணிக்கும் போது வேகமாகவும், பின்னோக்கி பயணிக்கும் போது மெதுவாகவும் நகரும். கிரகம் பின்னோக்கி செல்லும் போது, நற்பலன்களை விட கெடுபலன்களே அதிகம் கிடைக்கும். அதுவும் குரு பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கும் போது, அது ஒருவருக்கு நடக்கும் சுப நிகழ்வுகளை தாமதப்படுத்தும் அல்லது ஒருவர் சுப காரியத்திற்காக அதிக செலவுகளை செய்வார்.
மேஷம்
மேஷ ராசியில் ராகு பயணித்து வருகிறார். ராகு மற்றும் குரு சேர்க்கையானது குரு சாண்டல் என்ற ஆபத்தான யோகத்தை உருவாக்குகிறது. ஜோதிடத்தில் இது மோசமான பலன்களைத் தருவதாக கூறப்படுகிறது. அதுவும் குரு வக்ர நிலையில் இருப்பதால், உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் முக்கியமான விஷயங்களில் முடிவெடுப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். நிதி விஷயங்களில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
ஜூலை மாதத்தில் ஏற்கனவே சனி வக்ர நிலையில் மாறினார். இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்கியது. இந்நிலையில் குரு வக்ரமாக மாறுவதால், மிதுன ராசிக்காரர்கள் பணம் தொடர்பான சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் பணத்தை திரும்ப பெறுவதில் சிக்கலை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்காமல் சிரமப்படுவீர்கள்.
மீனம்
குரு பகவான் தனது சொந்த ராசியில் முதல் வீட்டில் வக்ரமாகிறார். இப்படி வக்ர நிலையில் நவம்பர் 24 அம் தேதி வரை இருப்பார். இதனால் இக்கால கட்டத்தில் திருமணமாகாதவர்களுக்கு திருமண விஷயத்தில் பிரச்சனைகள் வரலாம். திருமணம் தாமதமாகலாம். எடுத்த காரியத்தில் முடிவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பண பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். வக்ர குருவின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்க விஷ்ணு பகவானை வழிபடுங்கள். மேலும் வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்யுங்கள். இதனால் நற்பலன் கிடைக்கும்.
Leave a Reply
View Comments