Mon, Dec5, 2022

#Trending

சமந்தாவுக்கு போட்டியாக புஷ்பா 2 படத்தில் குத்தாட்டம் போடும் பிரபல நடிகை…

அல்லு அர்ஜுன் நடிப்பில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்த திரைப்படம் புஷ்பா. இதில் பகத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிய திரைப்படம் தான் புஷ்பா. மேலும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்திருந்தார்.

இந்த படத்தில் ‘ஊ சொல்றியா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதில், நடிகை சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பட்டி தொட்டி எங்கும் கலக்கினார்.

இந்த நிலையில் புஷ்பா 2 படத்திலும் ஒரு குத்துப்பாட்டு இடம்பெற உள்ளதாகவும், அந்த பாடலுக்கு நடிகை காஜல் அகர்வால் நடமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities