பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் தாமரை செல்வியை விளாசி தள்ளி உள்ளார் கமல். சுருதி ஆடை அணிவது அடக்க ஒடுக்கமாக இல்லை என தாமரை பேசியதை எதிர்த்து சிபி பேசிய பேச்சு பெரும் பிரச்சனையை கிளப்பியது.
இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை அந்த பஞ்சாயத்தை கையில் எடுத்து கமல் அறிவுரை கூறியுள்ளார்.
கட்டிப்பிடிப்பது பற்றி ஐக்கி பெர்ரி பேசி இருந்தார். அதற்கு பிரியங்காவே அசத்தலான விளக்கம் கொடுத்து கட்டிப்பிடி வைத்தியத்தையே கமல் சாரிடம் தான் கற்றுக் கொண்டோம் என்று செம போடு போட்டார். மேலும், அது நம் எண்ணத்திலும் பார்க்கிற பார்வையிலும் தான் இருக்கிறது என பிரியங்கா பேசி இருந்தார்.
அதே போல பிக் பாஸ் வீட்டில் மாடல் அழகியான சுருதி அணியும் ஸ்லீவ்லெஸ் ஆடை தாமரை செல்விக்கு தப்பாக தெரிந்த நிலையில், அது அடக்க ஒடுக்கமாக இல்லை. கிராமத்தில் இருந்து வந்த பெண் இப்படியா உடை உடுத்துவது என கேட்க அதற்கு சிபி நீங்க அடக்கமா இருக்கீங்களா? என பதில் கேள்வி கேட்டு தாமரையை டென்ஷன் ஆக்கி விட்டார்.
ஆடை பற்றிய பேச்சு பிக் பாஸ் வீட்டில் எழுந்தது. அடக்கம் பற்றி சிபி பேசுவதற்கு முன்பாக அந்த வார்த்தையை தாமரை தான் பயன்படுத்தினார் என்று சாட்டையை தாமரை பக்கம் சுழற்ற ஆரம்பித்தார் கமல். உடனே தாமரையின் முகம் டோட்டலாக மாறி போனது. இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் இப்படியொரு ஜூம் ஷாட்டை கேமரா மேன் வைத்து விடுவார் போல தெரிகிறது.
ஏன் மற்றவர்கள் ஆடை குறித்த கமெண்ட்டை நீங்க அடிக்கிறீங்க அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்கிற ரீதியில் கமல் கேட்க, புள்ளைங்களாம் இப்படி துணி உடுத்தி நான் பார்த்ததே இல்லை சார்.
படத்தில் தான் பார்த்து இருக்கேன் என தனது தரப்பு வாதத்தை தாமரை செல்வி எடுத்து வைத்தார். வெறும் கிராமத்து பெண் இப்படி பேசினால் ஓகே ஆனால், நாடக நடிகை இப்படி பேசுவது ஏதோ எழுதி கொடுத்து பேசுவது போலவே உள்ளதாக நெட்டிசன்கள் ஃபீல் செய்து வருகின்றனர்.
சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன் நேரில் பார்த்தது கிடையாது. அதனால் பிடிக்கவில்லை என தாமரை செல்வி சொல்ல, இதனால் உங்களுக்கு எந்த ஒரு பலனும் கிடையாது.
இது ஒரு தன்மான கோபம் கூட கிடையாது ஒரு குழப்பத்தில் வருவது என தாமரை செல்விக்கு மட்டுமின்றி பெண்கள் ஆடை அணிவது குறித்து தவறான கருத்து உடைய அனைவருக்கும் எடுத்துரைப்பது போல அட்வைஸ் செய்துள்ளார் கமல்.
பிக் பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் சரியான கருத்துக்களை உரிய நேரத்தில் எடுத்து வைத்து நல்ல பேரை வாங்கி வருகிறார் சிபி. நகர அணியில் சிறப்பாக பேசியவர் என்கிற பட்டத்தையும் அந்த அணியினர் பிரியங்காவுக்கு கொடுக்காமல் சிபிக்கு கொடுத்தது ரசிகர்களால் பாராட்டுக்களை அள்ளி உள்ளது.
ஆடைக்குள் காயினை வைத்து விளையாடக் கூடாது என்றும் சுருதிக்கு எதிராக தாமரை ஆடை பற்றி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டது என எல்லாமே சிறப்பாக செய்து வருகிறார் சிபி.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.