தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார் நாசர். இந்த நிலையில் தெலுங்கானா போலீஸ் அகாடமியில் நடந்த படப்பிடிப்பின் போது நடிகர் நாசர் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் பரவியது. நாசர் ஷூட்டிங் ஸ்பாட்டில் காயமடைந்ததாக பரவிய தகவலை அடுத்து அவரது ரசிகர்கள் பதறினர்.
இந்நிலையில் நாசரின் உடல்நிலை குறித்து அவரது மனைவி கமிலா விளக்கமளித்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, எனது கணவர் மிகவும் நலமாக இருக்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் ஒரு பாசி படர்ந்த பாறையில் கால் தவறி கீழே விழுந்ததால், சிறிய சிராய்ப்புகள் ஏற்பட்டன. இதன்காரணமாகதான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சிறிய சிராய்ப்புகள்தான என்பதால் மருத்துவர்கள் டி.டி ஊசி மட்டும் போட்டு வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். இதற்கிடையே அவர் ஐ.சி.யூ வில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற வதந்திகள் பரவியது மிகவும் வேதனையாக இருக்கிறது. அவர் மிகவும் நன்றாக உள்ளார்.
அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். எனவே எனது கணவர் உடல்நிலை குறித்து தவறான செய்திகளை பரப்பாதீர்கள்” இவ்வாறு கமிலா தெரிவித்துள்ளார்.