ஆசிட் கலந்த ஜூஸ் கொடுத்த காதலி
தமிழக எல்லையோரம் கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பாறசாலை பகுதியைச் சேர்ந்த ஷாரோன் ராஜ் கல்லூரி இறுதியாண்டு மாணவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மரணத்திற்கு தோழி அளித்த குளிர்பானம் தான் காரணம் என ஷாரோன் ராஜின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி புகார் அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால், ஷாரோன் ராஜின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி பொதுமக்களின் கோரிக்கையாகவும் உயர்ந்தது.
இதைத்தொடர்ந்து விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்தப் பெண்ணின் முதல் கணவன் உயிரிழப்பான் இரண்டாவது கணவருடன் மட்டும் தான் வாழ முடியும் என ஜாதகத்தை பார்த்து ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார்.
இதை நம்பி தன்னுடைய குடும்பத்துடன் பக்காவாக பிளான் செய்த காதலி ஷாரோனுடன் தான் நவம்பர் மாதம் வீட்டை விட்டு வருவதாக கூறி நம்ப வைத்து அவளின் கழுத்தில் தாலியையும் கட்ட வைத்துள்ளார்.
பின்பு வீட்டிற்கு அழைத்து வந்து முதலில் கஷாயம் ஒன்றை கொடுத்து விட்டு குளிர்பானம் ஒன்றையும் கொடுத்துள்ளார். காதலியை நம்பி சாரோன்னும் குடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இவர் விஷத்தால் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து வாந்தி எடுக்கும்போது உடல் உறுப்புக்கள் சில வெளியில் வரும் நிலையிலும் யார் மீதும் சந்தேகமில்லை என்றும் கூறியுள்ளார்.
இது குறித்த போலீசார் காதலி உட்பட அவரது குடும்பத்தாருடன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .