Malayagam
Home » நரபலிக்கு முன் வன்புணர்வு… வாக்குமூலம் அளித்த நபர்

நரபலிக்கு முன் வன்புணர்வு… வாக்குமூலம் அளித்த நபர்

கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் கைதான நபர் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர வைத்துள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள இலந்தூரில் ரோஸி (59), பத்மா (52) ஆகிய இரண்டு பெண்கள் நரபலி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

குறித்த பெண்களின் உடல்கள் பல துண்டுகளாக வெட்டப்பட்டது என வெளியான தகவல்கள் மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் இந்த கொடூர சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஷஃபி அளித்த வாக்குமூலம் திடுக்கிட வைத்துள்ளது.

ஷஃபி அளித்த வாக்குமூலத்தில், ‘அந்த இரண்டு பெண்களையும் கொலை செய்வதற்கு முன் ஹொட்டல் ஒன்றிற்கு அழைத்து சென்று அவர்களை வன்புணர்வு செய்தேன். அவர்களை கட்டி வைத்து உடல் உறவு கொண்டேன். அதன்பின்தான் அவர்களை நரபலி கொடுக்க அழைத்து சென்றேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த ஹொட்டல் அறையில் மேலும் ஒரு ஆண் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொல்லப்பட்ட பெண்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர்களின் பிறப்புறுப்பில் கத்தியால் கீறப்பட்டதும், உட்பக்கம் எல்லாம் கத்தியால் குத்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஷஃபிக்கு வங்கிக் கணக்கு எதுவுமே இல்லை, எனவே பணத்திற்காக அல்லாமல் தனது விருப்பத்திற்காக அவர் கொலை செய்துள்ளார் எனவும், ஏற்கனவே 75 வயது மூதாட்டியை வன்புணர்வு செய்துள்ளார் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed