Sat, Mar6, 2021
Home தலைப்பு செய்தி டிசம்பர் மாசத்துல உங்க பிறந்த திகதியை சொல்லுங்க.. ரகசியத்தை சொல்றோம்!

டிசம்பர் மாசத்துல உங்க பிறந்த திகதியை சொல்லுங்க.. ரகசியத்தை சொல்றோம்!

- Advertisement -

ஒரு வருடத்தின் கடைசி மாதம் தான் டிசம்பர். அதேப் போல் குளிர்காலத்தின் முதல் மாதமும் இது தான். மேலும் இந்த மாதத்தை விழாக்காலம் என்றே கூறலாம்.

ஏனெனில் இந்த மாதத்தில் தான் கிறிஸ்துமஸ் வருகிறது. அதோடு வருடத்தின் கடைசி மாதம் என்பதால், புதிய ஆண்டை வரவேற்கும் ஆர்வத்தில் இருப்போம். சொல்லப்போனால் இந்த மாதம் அனைவருக்கும் பிடித்த மாதம் என்றும் சொல்லலாம்.

ஆனால் இத்தகைய மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்து கொள்ள வேண்டுமா? பொதுவாக டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் ஒரு நல்ல ஆசிரியர்களாக இருப்பார்கள். தங்களிடம் உள்ள அறிவை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

மற்றவர்களுக்கு முடிந்த வகையில் உதவி செய்ய முயற்சி செய்வார்கள். முக்கியமாக நேர்மையானவர்களாக இருப்பர். அதே சமயம் விளையாட்டுத்தனமாகவும், சுறுசுறுப்பானவராகவும் இருப்பார்கள். அதுமட்டுமின்றி, எந்த ஒரு சிக்கலான சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிப்பார்கள்.

இப்போது டிசம்பர் மாதத்தில் பிறந்த நான்கு வகையான மக்களைப் பற்றிக் காண்போம். இதில் நீங்கள் எந்த வகையினர் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

முதல் வகை

டிசம்பர் 1 முதல் 8 வரையிலான திகதிகளில் பிறந்தவர்கள் முதல் வகையினர். இந்த வகை மக்கள் எதையும் எதிர்த்து தனித்து வாழக்கூடியவர்கள். நிலைத்தன்மையும், ஸ்திரத்தன்மையும் அவர்களின் வாழ்க்கையின் தூண்களாகும். இதைப் பார்க்கும் பலருக்கு இவர்கள் திமிர்பிடித்தவர்களாக காட்சியளிக்கலாம். ஆனால் உண்மையில், அவர்கள் நம்பமுடியாத அளவில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

இந்த வகை மக்கள் வலுவானவர்கள். இவர்கள் ஒரு விஷயத்தை செய்ய மனம் வைத்துவிட்டால், அவர்கள் நிச்சயமாக அதை செய்துவிடுவார்கள். கருணையுள்ளம் கொண்டவர்கள் மற்றும் மன்னிக்கக்கூடியவர்கள் மற்றும் அதை மறந்தும் விடுவார்கள். இந்த குணங்கள் தான் இவர்களை சிறந்தவர்களாக காட்டுகின்றன. மேலும் இவர்கள் தைரியமானவர்கள், நல்ல பேச்சாளர்களும் கூட.

இரண்டாவது வகை

டிசம்பர் 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை பிறந்தவர்கள் இரண்டாவது வகையினர். உங்களுக்கு பேசவோ அல்லது ஆலோசிக்கவோ யாராவது தேவையென்று நினைத்தால், இந்த வகை நபர்கள் சரியானவர்களாக இருப்பர். இவர்கள் தங்களின் உணர்ச்சியை சமநிலையில் பராமரிக்கக்கூடியவர்கள். வலிமையான மனிதர்கள் மற்றும் தங்கள் வாழ்க்கை தோன்றும் எந்த கஷ்டங்களையும், தடைகளையும் எதிர்த்து வாழக்கூடியவர்கள்.

இந்த வகை மக்கள் எதை செய்தாலும் அதில் வெற்றி காண்பார்கள். இவர்கள் எதை செய்தாலும் அது சரியானதாகவே இருக்கும். எப்பேற்பட்ட கடினமான சூழ்நிலையையும் அழகாக சமாளித்து வாழக்கூடியவர்கள். இவர்களின் தொழில் வாழ்க்கை எப்போதும் வெற்றிகரமானதாகவே இருக்கும். இவர்களுக்கு யானைப் போன்ற நினைவாற்றலைக் கொண்டவர்கள்.

எந்த விஷயத்தைப் பற்றியும் விரல் நுனியில் தெரிந்து வைத்திருப்பவர்கள் மற்றும் நல்ல திறமையானவர்கள். இவர்கள் தங்களின் இலக்கை அடைவதிலும், கனவுகளை நிறைவேற்றுவதிலும், எப்போதும் மிகவும் உறுதியாக இருப்பார்கள்.

மூன்றாவது வகை

டிசம்பர் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையிலான மக்கள் மூன்றாம் வகையினர். இவர்கள் திருமண விஷயத்தில் அதிர்ஷ்டசாலிகள் அல்ல. ஆனால் குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்பதை நன்கு தெரிந்தவர்கள். இவர்கள் அரிதாகவே நோய்வாய்ப்படுவார்கள். மிகவும் வலுவான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள் என்பதால், நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். இவர்கள் அனைத்திலும் அமைதியைத் தேடுவார்கள். அளவுக்கு அதிகமாக சிந்திக்கக்கூடியவர்கள்.

இந்த நாட்களில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டமான நட்சத்திரத்தில் பிறந்தவர்களாவர். இதனால் உலகையே ஆளும் திறன் கொண்டவர்களாக இருப்பர். இவர்களுக்கு ஃபேஷன் மீது விருப்பம் இருக்கும். இவர்கள் எப்போதும் யாரையும் சார்ந்து வாழாமல் தனித்து தன் சொந்த காலில் வாழ நினைப்பார்கள். எல்லாவற்றிலும் சுதந்திரத்தை விரும்புவார்கள். இவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தால் ஒவ்வொரு வேலையையும் விரும்பி செய்வார்கள்.

நான்காவது வகை

இறுதியாக டிசம்பர் 23 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையில் பிறந்தவர்கள் நான்காம் வகையினர் ஆவர். டிசம்பர் மாதத்தின் இந்த நாட்களில் பிறந்தவர்கள் மிகவும் நம்பிக்கையானவர்கள் மற்றும் மிகவும் இனிமையானவர்கள். இவர்கள் தங்களின் நண்பர்களை மிகவும் உன்னிப்பாக தேர்ந்தெடுப்பார்கள். மேலும் இவர்கள் எப்போதும் புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கொண்டவர்கள்.

டிசம்பர் மாதத்தின் கடையில் பிறந்தவர்களுக்கு பயணிப்பது மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். நட்பு என்று வரும் போது, இவர்கள் தன் நண்பர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் கல்வி விவகாரங்கள் மற்றும் திருமண விஷயங்களில் அதிர்ஷ்டசாலிகள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

செய்திகள்

பிரபலமான பதிவுகள்

ரம்யா நம்பீசனா இது..?.. தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம்

விஜய் சேதுபதியுடன் ‘பிட்ஸா’, ‘சேதுபதி’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா நம்பீசன். சமீபத்தில் வெளியான மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் ‘புலி முருகன்’ படத்தில் நடித்துள்ளார். தமிழில் கதாநாயகியாக கடைசியாக சிபிராஜுடன் சத்யா படத்தில் நடித்தார்....

கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகையால் தலைசுற்றி கிடக்கும் ரசிகர்கள்..!

கேப்ரியலா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். இவர் 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது...

சட்டையை கழட்டி சமந்தா கொடுத்த அதிர்ச்சி… வைரலாகும் கிளிக்ஸ்…!

பிரபல நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கிளாமர் கிளிக்ஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன்...

கணவருடன் ஸ்ரேயா கன்றாவி போஸ்… எரியும் சிங்கிள் பசங்க…!

36 வயதாகியும் வெளிநாடுகளில் விடலைத் தனமாய் சுற்றி வாழ்க்கையை அனுபவித்து வரும் நடிகை ஸ்ரேயா தீவில் கணவருடன் கன்றாவியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வப்போது கணவருக்கு லிப் லாக்...