Malayagam
Home » ஜனவரி மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு நிறைய அதிர்ஷ்டத்தை கொடுக்கும்!

ஜனவரி மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு நிறைய அதிர்ஷ்டத்தை கொடுக்கும்!

என்னதான் நாம் கடினமாக உழைத்தாலும், அதிஷ்டம் இருந்தால் மட்டுமே நமக்கு வெற்றி கிடைக்கும் என்பது உண்மை. வர இருக்கும் புதிய ஆண்டின் முதல் மாதத்தில் சில ராசிகளுக்கு அதிஷ்டம் கிடைக்க போகிறது என ஜோதிடம் கூறுகின்றது. அந்த ராசிக்காரர்கள் யார் என இந்த தொகுப்பில் காணலாம்.

ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்கள் ஜனவரி மாதத்தில் நல்ல வேலை, பதவி உயர்வு, திருமண ஏற்பாடு, பண வரவு என அனைத்து அதிஷ்டங்களையும் பெறுவார்கள் என கூறியுள்ளது. அந்தவகையில், 2023 ஜனவரி மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்க போகிறது என இங்கே பார்க்கலாம்.

​துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பான மற்றும் அதிஷ்டம் நிறைந்த ஆண்டாக இருக்கும். இவர்கள் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி அருமையான மாதமாக இருக்கும். நீண்ட காலமாக உள்ள பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மாதத்தின் தொடக்கத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உங்கள் வீட்டின் சூழல் மிகவும் இனிமையாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும்.

நீங்கள் ஏதாவது வேலை தேடி கொண்டிருந்தாள் உங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும். உங்களின் நிதி நிலைமை வலுவாக இருக்கும். திருமணம் ஆகாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆவதற்கான வாய்ப்பு உள்ளது. வியாபார நீதியாக உங்களின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்.

​மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். உங்கள் குடும்பத்தினரிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் கனவு நிறுவனத்தில் வேலை கிடைப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் குடும்பம் உங்களுக்கு எல்லா விதத்திலும் ஆதரவாக இருப்பார்கள்.

திருமணம் ஆனவர்கள் தங்களின் அன்பானவர்களின் ஆரோக்கியத்தின் மீது சற்று கவனமாக இருக்க வேண்டும். புது மண தம்பதிகளுக்கு குழந்தை தொடர்பான நல்ல விஷயங்கள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஜனவரி சிறந்த மாதமாக இருக்கும். ஏனென்றால், அவர்கள் காட்டில் பணமழை பொழியும்.

​ரிஷபம்

புதிய ஆண்டில் பல நன்மைகளை பெற இருக்கும் ராசிகளில் ரிஷபமும் ஒன்று. ரிஷப ராசிக்காரர்கள் ஜனவரி மாதம் பல அதிஷ்டத்தை அனுபவிக்க போகிறார்கள். திருமணம் செய்ய வரன் தேடுபவர்களுக்கு நல்ல மற்றும் உங்களுக்கு ஏற்ற வரன் கிடைக்கும்.

திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நீங்கள் உங்கள் துணையுடன் அதிக நேரத்தை செலவிடுவார்கள். பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். இதனால் உங்கள் இருவருக்கும் இடையிலான இணக்கம் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலக அரசியலில் இருந்து சற்று விலகி இருப்பது உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.

​தனுசு

2023 ஜனவரியில் நடைபெறும் கிரக மாற்றங்களால் தனுசு ராசிக்காரர்கள் நிறைய நல்ல பலன்களை அனுபவிப்பார்கள். இவர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் நிறைவேறும். நீங்கள் தொட்டது எல்லாம் துலங்கும். உங்கள் வாழ்க்கைத்துணை உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். அவர்களின் அன்பும் அரவணைப்பும் உங்களை நல்ல நிலைமைக்கு கொண்டு செல்லும்.

நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் உங்கள் இமேஜ் நன்றக இருக்கும். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புதிய மனை மற்றும் கார் வாங்குவதற்கான அடித்தளத்தை அமைப்பீர்கள். எனவே, ஜனவரியில் உங்கள் வாழ்க்கையில் இன்பமழை பொழிய உள்ளது.

கன்னி

ஜனவரி மாதம் நிகழும் கிரக மாற்றங்களால், அதிக பலன்களை பெறப்போகும் ராசிகளில் கன்னியும் ஒன்று. இவர்கள் ஜனவரி மாதம் பல கலவையான பலன்களை பெற உள்ளனர். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். புதிய யோசனைகளால், உங்கள் தொழில் நல்ல லாபத்தை ஈட்டும். பணியிடத்தில் உங்களுக்கு சற்று மகிழ்ச்சி கிடைக்கும்.

வேலைச்சுமை குறைவதால், சற்று நிம்மதியாக உணர்வீர்கள். உங்களின் பழைய நண்பர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களுக்கு பின்னர் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட வாய்ப்புக்கள் கிடைக்கும்.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed