HomeசினிமாTelevisionமகராசி சீரியல் நடிகை சன் டிவியில் ரீ என்ட்ரி!

மகராசி சீரியல் நடிகை சன் டிவியில் ரீ என்ட்ரி!

மாடல் ஆக அறிமுகமாகி பிரபல சீரியல் நடிகையாக சின்னத்திரையை கலக்கி வருபவர் திவ்யா ஸ்ரீதர்.

கன்னடத்தில் சில சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார் திவ்யா ஸ்ரீதர். இதனை அடுத்து தமிழில் கேளடி கண்மணி தொடரில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

- Advertisement -

இந்த தொடரில் இருந்து விலகிய இவர் இதனை அடுத்து சில கன்னட சீரியல்களில் நடித்தார். அடுத்ததாக சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி தொடரின் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனம்கவர்ந்த நாயகியாக அசத்தி வந்தார்.

வெகு நாட்கள் இந்த தொடரின் ஹீரோயினாக நடித்து வந்த திவ்யா கொரோனா காரணமாக விலகினார்.இவர் நடிக்கும் புதிய தமிழ் சீரியல் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.

- Advertisement -

சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள செவ்வந்தி தொடரில் திவ்யா ஸ்ரீதர் ஹீரோயினாக நடிக்கிறார்.பிரபல நடிகர் ராகவ் இந்த தொடரின் நாயகனாக நடிக்கிறார் இந்த தொடர் வெகு விரைவில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular