ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்த மகா முனியில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் மஹிமா நம்பியார் அதற்காக பல விருதுகளையும் குவித்து வருகிறார்.
குற்றம் 23 படத்திற்கு பிறகு மீண்டும் அருண் விஜய்யுடன் இணைந்து ஓ மை டாக் என்ற படத்தில் நடித்துள்ள மஹிமா நம்பியார் சமீபத்தில் தான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங்கை முடித்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் நீண்டகாலமாக வெளியாக காத்துக்கொண்டிருக்கும் ஐயங்கரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மஹிமா நம்பியார் இப்பொழுது பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் சேலையில் மனதை கொள்ளை கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.
சாட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மஹிமாவுக்கு குற்றம் 23 திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் அருண் விஜய் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.
மருத்துவத்துறையில் நடக்கும் உடலுறுப்பு திருட்டு மாஃபியாக்கள் பற்றிய திரைப்படமாக உருவான இந்த படத்தில் கதாநாயகியாக மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா இரட்டை வேடத்தில் கலக்கிய மகாமுனி திரைப்படம் ரசிகர்கள் பாராட்டுகளை பெற்று வந்த சூழலில் இப்போது சர்வதேச விருதுகளையும் குவித்து வருகிறது.
இதில் இந்துஜா, மற்றும் மஹிமா நம்பியார் கதாநாயகிகளாக நடித்து இருந்தனர் குறிப்பாக மஹிமாவின் தீபா கதாபாத்திரம் மிக வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுவரை க்யூட்டான நடிகையாக படங்களில் வந்து சென்ற மஹிமா நம்பியார் இந்த படத்தில் பெண் சமூகப் போராளியாக நடித்து மிரட்டி இருப்பார்.
சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்து வரும் மகா முனி படத்தில் சமூகப் போராளியாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மஹிமா நம்பியாருக்கு மிகச் சிறந்த நடிகை என விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது . குற்றம் 23 படத்திற்கு பிறகு மீண்டும் அருண் விஜய்யுடன் இணைந்து ஓ மை டாக் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் அருண் விஜய் மற்றும் அவரது மகன் அர்ணவ் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் நாயைப் பற்றிய படமாக உருவாகி உள்ளது.
குற்றம் 23 வெற்றிக்குப் பிறகு மீண்டும் அருண் விஜய் மற்றும் மஹிமா இப்படத்தில் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்க சமீபத்தில் தனது டப்பிங் பணிகளை முடித்துள்ளார் மஹிமா நம்பியார்
ஈட்டி பட இயக்குனரின் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடித்துள்ள ஐயங்கரன் திரைப்படம் மிக விரைவிலேயே ரிலீஸாக உள்ளது. இதில் கதாநாயகியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.
மலையாளம் தமிழ் என இரு மொழிகளிலும் பிரபலமாக உள்ள மஹிமா நம்பியார் இப்பொழுது பிங்க் ஸ்லீவ்லெஸ் சேலையில் மனதை கொள்ளைகொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.