Save 20% off! Join our newsletter and get 20% off right away!

கமல்ஹாசன் தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அறிக்கை

உலகநாயகன் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி விட்டதாக வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாக வதந்திகள் வெளியானது என்பதும், இதுகுறித்த பழைய புகைப்படம் ஒன்று வைரலானது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் அவர்கள் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து இன்னும் டிஸ்சார் ஆகவில்லை. ஆனால் நலமுடன் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் வெளியில் உலவும் நிழற்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அப்போலோ மருத்துவமனையில் கால் அறுவைசிகிச்சை முடிந்து தலைவர் வீடு திரும்பியபோது வெளியான புகைப்படம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.