Fri, May7, 2021

ஆயிரம் ரூபாய்க்கு 20 கிலோகிராம் பச்சை தேயிலை… வெடித்தது போராட்டம்!

பொகவந்தலாவை பொகவான லின்ஸ்டன் தோட்ட மக்கள், தோட்ட அதிகாரிக்கு எதிராக ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வேண்டுமென்றால், நாளொன்றுக்கு பச்சைத் தேயிலை 20 கிலோகிராம் எடுக்க வேண்டும் என தோட்ட அதிகாரி கூறுவதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு 20 கிலோகிராம் பச்சை தேயிலையை பறிக்க தவறும் தொழிலாளர்களுக்கு கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் மாத்திரமே வழங்கப்படுவதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளோன்றுக்கு 15 கிலோகிராம் கொழுந்தை மாத்திரமே பறிக்க முடிவதாக தெரிவிக்கும் தொழிலாளர்கள் தோட்ட நிர்வகத்தால் வழங்கப்பட்ட பல்வேறு நலன்புரி சேவைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்