கண்டி கட்டுகஸ்தோட்டை நகரில், முகக்கவசம் அணியாமல் மரக்கறி விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆறுவரை, கட்டுகஸ்தோட்டை பொலிஸார், நேற்று (19) கைதுசெய்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலுக்கு அமையவே மேற்படி அறுவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை, முகக்கவசம் அணியாமை உள்ளிட்ட குற்றங்களுக்காக மேற்படி அறுவர் மீதும் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.எம்.எஸ்.உவிந்தசிறி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.