16.7 C
Hatton
Tuesday, April 13, 2021
spot_img
spot_img
spot_img

இதையும் படிங்க

தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் திடீர் பரிசோதனை

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு தலவாக்கலை நகர வர்த்தக நிலையங்கள், இன்று (7) திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

கொட்டகலை பொது சுகாதார காரியாலயம், தலவாக்கலை லிந்துலை நகரசபை ஆகியன இணைந்தே, இந்தத் திடீர் பரிசோதனையை மேற்கொண்டனர்.

புத்தண்டை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய நகருக்கு வரும் நுகர்வோர் நலன் கருதியே, திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள், தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தலவாக்கலை நகரிலுள்ள அனைத்து உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்களிலும் சோதனை மேற்கொண்டதாகவும் கூறினர்.

இதன்போது பாவனைக்குதவாத பருப்பு, உழுந்து உட்பட சில பொருட்கள் மீட்கப்பட்டு தீ வைக்கப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்