எம்பிலிபிட்டிய, சூரியவெவ, செவனகல பிரதேசங்களில், மணல்களை ஏற்றிக்கொண்டு செல்லும் லொறி, டிப்பர் ரக வாகனங்களால், பொதுமக்கள் பெரும் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாகனங்கள், வீதிச் சட்டவிதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்றும் அதிவேகமாகப் பயணிப்பதால் ஏற்படும் விபத்துகளால். உயிராபத்துக்குள் ஏற்பட்டு பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.