மஸ்கெலியா சுகாதார பிரிவில் நேற்று(20) மாலை வெளியான அறிக்கையின்படி 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்படி மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டம், டிசைட் தோட்டம், ஹப்புகஸ்தென்ன தோட்டம், சாமிமலை மஹானிலு ஆகிய தோட்டங்களில் தலா ஒரு தொற்றாளர்கள் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொழும்பில் இருந்து வருகை தந்தவர்கள்.
ஏனைய இரு தொற்றாளர்களும் மஸ்கெலியா நகர பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இவர்களும் கொழும்பிலிருந்து வந்த நபர்களுடன் தொடர்புபட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
தொற்றாளர்கள் ஹங்குராங்கெத்த மற்றும் வலப்பனை ஆகிய கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
(க.கிஷாந்தன்)
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.