Fri, May7, 2021

மோகினி எல்ல பகுதியில் விபத்தில் இருவர் காயம்

நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதி, மோகினி எல்ல பகுதியில், சிறிய ரக கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, மவுசாகல நீர்த்தேக்கப் பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த பெண்ணொருவர் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில், கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படிக் காரனாது, பள்ளத்தில் விழுந்து மரமொன்றில் சிக்கி நின்றுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசேகர தெரிவித்தார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் அவசர அம்பியுலன்ஸ் வண்டியூடாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

விபத்துத் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்